சிங்கப்பூர் சென்று அடைந்து இருக்கும் கோத்தபய ராஜபக்சேவிடம் இருந்து இன்னும் ராஜினாமா கடிதம் கிடக்கப் பெறாததால் நாளை அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் கூடாது என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் சென்று அடைந்து இருக்கும் கோத்தபய ராஜபக்சேவிடம் இருந்து இன்னும் ராஜினாமா கடிதம் கிடக்கப் பெறாததால், முன்னர் கூறியபடி நாளை இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படாது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் மாலத்தீவு தப்பிச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்று இருக்கிறார். சிங்கப்பூருக்கு அவர் ஒரு வருகையாளர் மாதிரிதான் வந்து இருக்கிறார். அடைக்கலம் கேட்கவில்லை என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம் யாருக்கும் அடைக்கலம் கொடுப்பது இல்லை என்றும், அதேசமயம் கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கோத்தபய அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது ராஜினாமா கடிதம் பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்த்தனா கைக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ராஜபக்சே குடும்பம்.. புகலிடம் வழங்கவில்லை என சிங்கப்பூர் அரசு விளக்கம்.
இன்று ராஜினாமா கடிதம் கிடைக்கப் பெற்றாலும், எப்போது மீண்டும் பாராளுமன்றம் கூடும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு சென்று அடைந்த பின்னர் இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிப்பதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிச் சென்றுள்ளார். 13ஆம் தேதி (நேற்று) ராஜினாமா செய்வதாக கோத்தபய அறிவித்து இருந்தார். ஆனால், செய்யவில்லை. இன்று செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் செய்வார் என்று கூறப்பட்டது. அதன்படி ராஜினாமா செய்துவிட்டார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆனால், கடிதம் சபாநாயகருக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோத்தபய முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் அவரை சட்டப்படி அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இன்று ரணில் விக்ரமசிங்கேவிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Viral Video : கழிவறையில் கூட ஏசி, என்னமா வாழ்ந்திருக்காங்க!
அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய பிரதமரை தேர்வு செய்யுமாறு சபாநாயகரிடம் ரணில் தெரிவித்துள்ளார். இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தங்களது கட்சியின் சார்பில் தலைவர் சஜித் பிரேமதாசா பெயரை அதிபர் பதவிக்கு முன்னிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் நீக்குவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் சபாநாயகர் எடுக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கேட்டுக் கொண்டுள்ளன.