சிங்கப்பூரில் ராஜபக்சே குடும்பம்.. புகலிடம் வழங்கவில்லை என சிங்கப்பூர் அரசு விளக்கம்.

By Ezhilarasan Babu  |  First Published Jul 14, 2022, 8:36 PM IST

கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூரில் சென்றுள்ளனர். இதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.


கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூரில் சென்றுள்ளனர். இதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ராஜபக்சே குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் இதுவரை சிங்கப்பூர்  அரசிடம் அடைக்கலம் கோரவில்லை என்றும், இதுவரை சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு புகலிடம் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாலத்தீவில் அவர்களது குடும்பம் தங்கியிருப்பதை அறிந்து இலங்கை மக்கள் மாலத்தீவுக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் அங்கிருந்து ராஜபக்ச குடும்பம் சிங்கப்பூர் சென்றுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி, பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இது அனைத்திற்கும் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பமே காரணம் என அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் மாளிகை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர், போராட்டகாரர்கள் வசம் உள்ள அந்த மாளிகையை பொதுமக்கள் தற்போது தங்கள் இஷ்டம்போல பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சமைத்து சாப்பிடுவது,  நடனமாடுவது,  நீச்சல் குளத்தில் குளிப்பது,  கிரிக்கெட் விளையாடுவது என பொழுதை கழித்து வருகின்றனர். மொத்தத்தில் அதிபர் மாளிகை சுற்றுலா தளமாக மாறியுள்ளது.

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே ராஜினாமா... மக்கள் போராட்டம் வலுத்த நிலையில் பதவி விலகல்!!

இதற்கிடையில் கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகும் வரை ஓயப்போவதில்லை என மக்கள் தீவிரம் காட்டி வந்ததால், அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் போராட்டம் உக்கிரம் ஆனதை அடுத்து அவரது குடும்பம் இரவோடு இரவாக ராணுவ விமானத்தில் மாலத்தீவு தப்பிச்சென்றனர். நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்துவிட்டு சுயநலவாதி ராஜபக்சவின் குடும்பம் நாட்டை விட்டே ஓடி விட்டது என மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார் ஆனாலும்  குழப்பம் தீரவில்லை, கோத்தபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபர் மாளிகை என அனைத்து இடங்களையும் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் M.P, உட்பட பன்னீர் ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.. EPS அதிரடி.

தலைமறைவான கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார், கோத்தபய ராஜபக்சே முறையாக ராஜினாமா கடிதத்தை அனுப்பினால் மட்டுமே புதிய அரசை உருவாக்க முடியும் என்ற சூழலில் இருந்து வருகிறது. ஒருவேலை 13 ஆம் தேதி அவர் ராஜினாமா செய்தால் வரும் 20-ஆம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான அந்நாட்டில் சபாநாகர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள்  கோத்தபய ராஜபக்சே விமானப்படை விமானம் மூலம் அதிகாலை மாலத்தீவில் தப்பிச்சென்றார், இதனால் ஒட்டுமொத்த இலங்கையும்  வன்முறைக் காடாக மாறியது, அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், வெளிநாட்டினர், இந்தியர்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பொதுமக்கள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் அமைதி காக்க வேண்டும் என்றும், புதிய அரசு அமையும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் முப்படை தளபதி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் கோத்தபய ராஜபக்சே ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் அதிகாரப்பூர்வமாக பதவியில் இருந்து விலகும் வரை ஓயமாட்டோம் என போராட்டக்காரர்கள் முழங்கி வருகின்றனர். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதேநேரத்தில் மாலத்தீவில் கோத்தபய ராஜபக்சே குடும்பம் இருப்பதாக அறிந்த இலங்கை மக்கள் மாலத்தீவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் போய், துபாயில் தஞ்சம் அடைந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன, அதாவது அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே தமிழர்கள் இருப்பதால் அந்த நாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளுமா என்பது கேள்விக்குறி தான் என்றும் செய்திகள் பரவி வருகிறது. புதன்கிழமை அதிகாலை இலங்கையில் இருந்து  தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்திருந்த கோத்தபய ராஜபக்ச குடும்பத்தினருடன் வியாழக்கிழமை இன்று சிங்கப்பூர் சென்றடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. மாலத்தீவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் பயணித்து  சிங்கப்பூர் அடைந்துள்ளனர், அதேபோல் சிங்கப்பூரிலிருந்து அவர்கள் விரைவில் சவுதி அரேபியாவுக்கு செல்வார்கள் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. 

ஆனால் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து மேற்கொண்டு பயணம் செய்ய மாட்டார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. அடுத்து ராஜபட்ச குடும்பம் என்ன செய்யப்போகிறது? அடுத்து எங்கு செல்ல போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.  ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அவர் மீண்டும் அதிபர் பதவியை ஏற்றுக் கொள்வாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.  இதற்கிடையில்தான் ராஜபக்ச குடும்பம் சிங்கப்பூரில் இருப்பதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்உறுதிப்படுத்தியுள்ளார். சவுதி ஏர்லைன்ஸ் விமானம் SV-788 மூலம் ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இரவு 7 மணிக்கு  தரை இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜபக்ச குடும்பம் தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளனர், அவர்கள் சிங்கப்பூர் அரசிடம் புகலிடம் கோரவில்லை, இதுவரையில் அவர்களது குடும்பத்திற்கு  எந்தவித புகலிடமும் சிங்கப்பூர் அரசு வழங்கவில்லை, பொதுவாக சிங்கப்பூர் எவருக்கும் புகலிடம் வழங்காது என உறுதிபட தெரிவித்துள்ளார். அதாவது அதிபர் பதவி கைவசம் இருந்தால் மட்டுமே தங்களால் பாதுகாப்பாக இருக்க முடியும், எந்த நாட்டிலும் அதை வைத்து தஞ்சம் கோர முடியும் என்பதால் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இழுத்தடித்து வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!