இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிராகப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே தனது பதவியை அதிராகப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்தா யபாஅபேவர்தனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரமாக மாறியது. இதனிடையே அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச சவுதி அரேபியாவுக்கு தப்பிக்கிறார்? சிங்கப்பூருக்கு பறந்தார்
இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியானது. ஆனால் அதிபர் கோட்டபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை. கோட்டபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சே தனி விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: இலங்கையில் போராட்டக்காரர்களை கண்காணிக்க களத்தில் இறங்கிய ராணுவம்
தற்போது மாலத்தீவில் அதிபர் கோட்டபய ராஜபக்சே, அவரின் மனைவி ஆகியோர் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு செல்வதாக தகவல் வெளியானது. ஆனால் கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தரவில்லை என்றும், தனிப்பட்ட பயணமாக கோத்தபாய ராஜபக்சே வருகை தருவதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில் கோட்டபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் பதவியிலிருந்து கடந்த புதன்கிழமை விலகுவதாக கோட்டபய ராஜபக்சே தெரிவித்திருந்தார். ஆனால், ராஜபக்சே ராஜினாமா கடித்ததை வழங்கவில்லை. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்தா யபாஅபேவர்தனா, அதிபர் கோட்டபய ராஜபக்சவிடம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அப்போது, விரைவில் ராஜினாமா கடிதத்தை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், வேறு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மறுபுறம் மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து கோட்டபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்தா யபாஅபேவர்தனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.