இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிற்கு தற்போது திரும்புவது பாதுகாப்பானதாக இருக்காது. அவரது வருகை மேலும் அரசியல் ரீதியிலான கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று வால் ஸ்டிரீட் ஜர்னலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிற்கு தற்போது திரும்புவது பாதுகாப்பானதாக இருக்காது. அவரது வருகை மேலும் அரசியல் ரீதியிலான கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று வால் ஸ்டிரீட் ஜர்னலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார். பொருளாதாரம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டதை அடுத்து மக்களின் போராட்டம் வெடித்தது. மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவு சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கும் அவருக்கு அந்த நாடு விசா வழங்கவில்லை.
இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு
சிங்கப்பூரில் தாங்குவதற்கு முதலில் 15 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் 15 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் இலங்கை திரும்பலாம் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இதையடுத்து, வால் ஸ்டிரீட் ஜர்னலுக்கு அளித்திருந்த பேட்டியில் ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பதாவது:
''இலங்கைக்கு தற்போது கோத்தபய ராஜபக்சே திரும்புவது சரியான நேரம் என்று நான் நம்பவில்லை. அவர் வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. நாட்டின் அதிகாரத்தில் சில சந்தேகங்களுக்கு கோத்தபயாவை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நிர்வாக காரணங்களுக்காக கோத்தபயாவுடன் தொடர்பில்தான் இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற ராஜபக்சே சகோதர்களுக்கு நீதிமன்றம் தடை
மேலும் நேற்று கண்டியில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ''வீட்டுக்கே போ என்று வீடு இல்லாத ஒருவரைக் கூறுவது சரியானது இல்லை. அதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒன்று போராட்டக்காரர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட எனது வீட்டை மீண்டும் கட்டமைத்து கொடுக்க வேண்டும் அல்லது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும்.
பொருளாதார சிக்கலில் இருக்கும் நாட்டை மீட்க சர்வதேச நிதி ஆணையத்தில் இருந்து கடனுதவி பெறுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கும் காரணத்தினால், போராட்டம் வெடித்தது. இலங்கை தற்போது சந்தித்துக் கொண்டு இருக்கும் பொருளாதார சீரழிவை சரி செய்வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். பொருளாதார சீழிவுக்கு முன்னாள் அதிபர் கோத்தபயாவை குற்றம்சாட்டுவது சரியானது இல்லை. போராட்டக்காரர்களால்தான், சர்வதேச நிதி ஆணையத்தில் இருந்து கடனுதவி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இலங்கை முன்னாள்அதிபர் கோத்தபய ராஜபக்ச விசாவை நீட்டித்தது சிங்கப்பூர்
சர்வதேச நிதி ஆணையம் நிதியுதவி செய்யாத வரை வேறு எந்த நாடுகளும் இலங்கைக்கு நிதியுதவி அளிக்க முன் வரவில்லை. சர்வதேச நிதி ஆணையம் நிதி கொடுப்பதற்கு முன்பாக, அந்த ஆணையத்திடம் இருந்து பெறும் கடனை எவ்வாறு திருப்பி இலங்கை அடைக்கும் என்ற வழிகளை காண வேண்டும். இதைத்தான் சர்வதேச நிதி ஆணையமும் எதிர்பார்க்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.