இன்று இரவு வான் கடல் மற்றும் தரையிலிருந்து காசாவிற்குள் ஒரு "குறிப்பிடத்தக்க தரை வழி தாக்குதலை" நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஆகவே காசா பகுதியில் பட்டம் அதிகரித்துள்ளது.
"இன்றிரவு என்ன நடக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இஸ்ரேல் உலகின் முதல் செயல்பாட்டு சோதனை லேசர் அமைப்பை நிலைநிறுத்தியுள்ளது, இது முதலில் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது. ஹமாஸை முடிவுக்குக் கொண்டுவருவதே எங்கள் இலக்கு" என்றார் இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகு.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன் நடத்திய கொடூர வான்வழி வழி மற்றும் தரைவழி தாக்குதலை அடுத்து இப்பொது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே போர் மூண்டுள்ளது. இந்த போரின் காரணமாக காசா முழுக்க பல பொதுமக்கள் கொன்றுகுவிக்கப்பட்டு வருகின்றனர்.
undefined
ஆபரேஷன் அஜய்: 235 இந்தியர்களுடன் துருக்கியில் இருந்து டெல்லி வந்த 2வது விமானம்
மேலும் காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு குடிநீர் கூட இல்லை என்ற தகவலை ஐ.நா.வின் உணவு அமைப்பு நேற்று வெளியிட்டது. காசாவில் 34 சுகாதார நிலையங்கள் இஸ்ரேல் படையால் தாக்கப்பட்டன. 11 சுகாதாரப் பணியாளர்கள் அதில் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஜெருசலேமில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த சூழலில் இன்று இரவு, ஒரு மிகப்பெரிய தாக்குதலை காசா மீது இஸ்ரேல் நடத்தவுள்ளது. இதில் என்ன நடக்கப்போகிறது என்று கடவுளுக்கு தான் வெளிச்சம் என்றும் கூறியுள்ளார் இஸ்ரேல் நாட்டு பிரதமர். அதிநவீன ஏவுகணைகளை இடைமறிக்கும் தொழிநுட்பத்தோடு தங்கள் சண்டையிட உள்ளதாகவும் கூறியுள்ளார் அவர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களமிறங்கியுள்ள நிலையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 27 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், காசாவின் பொதுமக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இஸ்ரேலியத் தலைமையைக் கேட்டுக் கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: ஆதாரத்துடன் குற்றம்சாட்டும்அமெரிக்கா!