Singapore : சிங்கப்பூரின் கட்டோங்கில் அமைந்துள்ள சேப்பல் சாலைக்கு அருகில் உலக போர் காலத்தை சேர்ந்த மற்றொரு போர் நினைவுச்சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பணி செய்து வந்த தொழிலாளர்களை, அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று அக்டோபர் 13 அன்று வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் சிங்கப்பூர் ஆயுதப் படைகள் (SAF), வெடிகுண்டு அகற்றும் குழு இது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று மதிப்பிட்டது, அதன் பிறகு சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) அதை அகற்றியது என்றும் டான் தனது பதிவில் கூறினார்.
அந்த குண்டை அப்புறப்படுத்த உறுதுணையாக இருந்த அப்பகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்தார் மனிதவள அமைச்சர். சிங்கப்பூரில் இதேபோல கடந்த செப்டம்பர் 20ம் தேதி 2023 அன்று, சிங்கப்பூரின் மேல் புக்கிட் திமா சாலையில், இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 100 கிலோ வான்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Scoot விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்! மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பிய விமானம்! சந்தேக நபர் கைது
பின்னர் அந்த 100 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் இருந்ததால், அந்த பகுதி சிங்கப்பூர் போலீஸ் அதிகாரியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி மதியம் 1.45மணிக்கு செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சரி இந்த குண்டுகள் ஆபத்தானதா?
வெளியாகும் தகவல்களின்படி, சிங்கப்பூரில் அவ்வப்போது கிடைக்கப்பெறும் இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்ட குண்டுகள் ஆபத்தானவை தான். ஆனால் அண்மையில் கிடைத்த இந்த சிறிய குண்டு ஏற்கனவே செயலிழந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கடந்த செப்டம்பர் மாதம் கிடைத்த அந்த 100 கிலோ எடை கொண்ட குண்டு, உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் அதை தவறாக கையாண்டால் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டது.