Singapore : சிங்கப்பூரில் 39 வயதான சிங்கப்பூரர் ஒருவர், Resorts World Cruises என்ற உல்லாச கப்பல் பயண நிறுவனத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த நபர், அந்த நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், கப்பலை வெடிவைத்து தகர்த்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
சிங்கப்பூர் ஊடகங்கள் அளித்த தகவலின்படி, அக்டோபர் 13, 2023 அன்று பிற்பகல் 2:30 மணியளவில், Resorts World Cruises இன் வாடிக்கையாளர் சேவைத் துறைக்கு "Bomb at Resorts World Cruises" என்ற தலைப்புடன் நியோ என்ற நபர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து திடுக்கிட அந்த நிறுவனம், உடனடியாக போலீசாரை அணுகியுள்ளது.
வெளியான தகவலின்படு அந்த நபர் கப்பல் நடத்துனரிடம் "எனது பணத்தை என்னிடம் திருப்பித் தரவும், இல்லையெனில் கப்பல் வெடித்து அனைவரும் கடலில் விழுந்துவிடுவார்கள்" என்று மிரட்டியதாக கூறியதாக கூறப்படுகிறது. நேற்று அக்டோபர் 13 ஆம் தேதி மாலை 4:03 மணியளவில் மெரினா பே க்ரூஸ் சென்டரில் நிறுத்தப்பட்டிருந்த உல்லாசக் கப்பலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் அங்கு வந்தனர்.
நாகை முதல் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சிங்கப்பூர் போலீஸ் மற்றும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மற்றும் மெரினா பே குரூஸ் மையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் உல்லாசக் கப்பலில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த கப்பலில் அச்சுறுத்தும் வகையில் எந்தவிதமான வெடிகுண்டோ அல்லது பிற பொருட்களோ இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் இதனால் சுமார் 2 மணிநேரம் கப்பல் புறப்பட தாமதமானதால், சுமார் 4,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சிங்கப்பூர் காவல் படையின் அக்டோபர் 14 அறிக்கையின்படி, மத்திய காவல் பிரிவு அதிகாரிகள் நியோவின் அடையாளத்தை நிறுவி, தகவல் கிடைத்த மூன்று மணி நேரத்திற்குள் அவரைக் கைது செய்துள்ளனர். இன்று அக்டோபர் 14ஆம் தேதி நியோ என்ற அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை மனநல காப்பகத்தில் வைத்து விசாரிக்க மற்றும் அவருடைய மனநலம் குறித்து அறிய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீண்டும் அவர் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியோவின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 50,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: ஆதாரத்துடன் குற்றம்சாட்டும்அமெரிக்கா!