
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு நடக்கும் பல்வேறு சம்பவங்களில் அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை கொலை செய்ய நடந்த முயற்சியில், துரதிர்ஷ்டவசமாக அவரின் பாதுகாப்பு தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இஸ்ரேலுக்கு எதிராக ஒரு "உலகளாவிய போரை" அறிவிக்க பாலஸ்தீன தலைவருக்கு 24 மணிநேரம் அவகாசம் வழங்கியதாக "சன்ஸ் ஆஃப் அபு ஜண்டால்" ( Sons of Abu Jandal) என்ற குழு கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேற்குக் கரையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் அபு ஜண்டால் அமைப்பினர் பொறுப்பேற்றுக்கொண்டனர். எனினும் பாலஸ்தீனிய தேசிய ஆணையம் இந்த கொலை முயற்சி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
முன்னதாக இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மேற்குக் கரைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சென்றிருந்தார். பிடன் நிர்வாகம் காஸாவின் குடிமக்களுக்கு உதவ எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அப்பாஸுக்கு உறுதியளிக்கும் அதே வேளையில், காசாவின் போருக்குப் பிந்தைய எதிர்காலத்தில் பாலஸ்தீனியர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பிளிங்கன் வருகை தந்த அன்று காசாவில் உள்ள இரண்டு அகதிகள் முகாம்களை இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு ஹமாஸ் தளங்கள் மீது எதிர்பார்க்கப்படும் முடுக்கிவிடப்பட்ட தாக்குதலுக்கு முன்னதாகவே காசா பகுதியை வெற்றிகரமாக பாதியாகப் பிரித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இதை தொடர்ந்து பாக்தாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிளிங்கன் “ 2007 இல் காஸா பகுதியில் ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இஸ்ரேலிய ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையின் அரை-தன்னாட்சிப் பகுதிகளை மேற்பார்வையிடும் பாலஸ்தீனிய ஆணையம், அதன் பின்னர் அங்கு எந்த செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லை. பாலஸ்தீனியர்கள் மத்தியில் மஹ்மூத் அப்பாஸுக்கு செல்வாக்கு இல்லை. பாலஸ்தீனிய அதிகாரம் "இப்போது மேற்குக் கரையில் ஸ்திரத்தன்மையைத் தக்கவைக்க முயற்சிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது" என்று கூறினார்.
ஆனால் மறுபுறம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் மோதலுக்கு அமெரிக்க ஆதரவு தெரிவிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர், " ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது" என்று எழுதப்பட்ட பதாகைகளை அசைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.