ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டுவரப் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி ஜி20 உச்சி மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டுவரப் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி ஜி20 உச்சி மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்கள் கூடி பல்வேறு அம்சங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து ஆலோசித்தனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் உலக நாடுகள் பல எரிபொருள், உணவுப் பிரச்சினையை, சுற்றுச்சுழல், பருவநிலை மாறுபாடு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இவை குறித்து உலகத் தலைவர்கள் இரு நாட்கள் ஆலோசித்தனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இந்தோனேசியா சென்றார். முதல்நாளான நேற்று எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகியவை குறித்து பிரதமர் மோடி பேசினார். 2வது நாளான இன்று, “ டிஜிட்டல் மாற்றம்” என்ற தலைப்பில் பிரதமர் மோடி ஜி20 தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
டிஜிட்டல் மாற்றம் என்பது மனித இனத்தின் ஒரு சிறிய பகுதியுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. அனைவரையும் உள்ளடக்கியதாக மாறும்போதுதான் அதன் பெரிய பலன்கள் உணரப்படும்.
ஜி20 உச்சி மாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தை அடுத்த 10 ஆண்டுகளில் கொண்டுவர பணியாற்றவேண்டும். புதிய தொழில்நுட்பத்தின் பலன்களை எந்த மனிதரும் அனுபவிக்காமல் இருக்கக் கூடாது.
இந்தியா சார்பில் அடுத்த ஆண்டு ஜி20உச்சி மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டில் “ வளர்ச்சிக்கான புள்ளிவிவரங்கள்”தான் முக்கியக் கருத்துருவாக இருக்கும்.
இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் பொதுச் சேவைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படைக் கட்டமைப்பில் ஜனநாயகக் கொள்கைகளோடு சேர்ந்துஅமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்த வகையான டிஜிட்டல் அடையாளமும் இல்லை என நம்புகிறார்கள்.
சவாலான நேரங்களில் இந்தோனேசியாவுக்கு இந்தியா பக்கபலமாக நின்றது: பிரதமர் மோடி பெருமிதம்
டிஜிட்டல் கட்டமைப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அதனால் சமூக பொருளாதார மாற்றத்தை உருவாக்க முடியும் என இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அனுபவித்து வருகிறது.
எங்களின் சகாப்தத்தில், டிஜிட்டல் மாற்றம் என்பது முக்கியமான குறிப்பிடத்தகுந்ததாகும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தும்போது, பலதசமங்களாக வறுமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒருசக்தியாக உருப்பெறும்
காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. உதாரணமாக கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிவது, காகிதமில்லாமல் பணியாற்றுவதை உணர்ந்திருக்கிறோம்.
இந்த பலன்களை முழுமையாக நாம் உணரவேண்டுமானால், டிஜிட்டல் தொழில்நுட்பம் உண்மையாக முழுமையாக அனைவருக்கும், பரவலாகக் கிடைக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த சக்திவாய்ந்த கருவியை எளிய வணிகத்தின் அளவுகோல்களாக மட்டுமே இப்போதுவரை பார்த்து வருகிறோம். இந்த சக்தி லாபம் மற்றும் நஷ்டத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்