இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்கள்தான் விசா வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் தரவில்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்கள்தான் விசா வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் தரவில்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு வருவதற்கு காரணமாக இருந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.
undefined
இதனால், மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். கடந்த 9ம் தேதி மக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச கடந்த 13ம்தேதி மாலத்தீவுக்குத் தப்பினார்.
இலங்கையின் 8வது அதிபராக பொறுப்பேற்றார் ரணில் விக்ரமசிங்கே!!
மாலத்தீவில் இரு நாட்கள் இருந்த கோத்தபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். சிங்கப்பூரில் வசித்துவரும் கோத்தபய ராஜபக்ச, அங்கு அடைக்கலம் புகுந்துள்ளாரா, அல்லது வேறு எந்த நாட்டுக்கும் செல்லவாரா, அல்லது இலங்கை வருவாரா என்ற கேள்வி எழுந்தது
கலகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்… எச்சரிக்கை விடுத்த ரணில் விக்ரமசிங்க!!
இதற்கு சிங்கப்பூர் அரசு அளித்த விளக்கம் குறித்து தி ஸ்ட்ரைட் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில், “ இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு குறுகியகால விசாவை வழங்கப்பட்டுள்ளது.
ராஜபக்சவுக்கு 14 நாட்கள் விசா மட்டுமே வரும் 28ம் தேதிவரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் நீட்டிக்கவில்லை. ராஜகபக்ச சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் கேட்கவும் இல்லை, சிங்கப்பூர் அரசு அடைக்கலம் வழங்கவும் இல்லை.
சிங்கப்பூருக்கு சுற்றுலாவுக்கு வருவோருக்கு பொதுவாக 14 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை விசா வழங்கப்படும். இந்த விசா காலத்தைக் கடந்து இங்கு தங்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விசா காலத்தை நீட்டிக்கலாம். ஆனால், விண்ணப்பம் பரிசீலிப்பு முன்னுரிமை அடிப்படையில் இருக்காது” எனத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வாழும் இலங்கை மக்கள் உறவினர்கள், நண்பர்கள் படும் துயரத்தை கண்டு மனம் வருந்துகிறார்கள். தங்களின் ஒருவேளை உணவை தியாகம் செய்து, செலவைக் குறைத்து, அந்தப் பணத்தை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்தியப் பிரதமர் மோடி உதவ வேண்டும்; சஜித் பிரேமதாசா உருக்கமான வேண்டுகோள்!!
இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதால், சிங்கப்பூரிலிருந்து சைக்கிள் வாங்கியும் இலங்கை மக்கள் அனுப்பி வைக்கிறார்கள்.