Sri Lanka: இலங்கையின் 8வது அதிபராக பொறுப்பேற்றார் ரணில் விக்ரமசிங்கே!!

By Dhanalakshmi G  |  First Published Jul 21, 2022, 10:41 AM IST

இலங்கையின் 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று நடந்த புதிய அதிபருக்கான தேர்தலில், 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார். 


இலங்கையின் 8வது அதிபராக 73 வயதாகும் ரணில் விக்ரமசிங்கே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று நடந்த புதிய அதிபருக்கான தேர்தலில், 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார். வரும் 2024ஆம் ஆண்டு வரை அதிபர் பொறுப்பு வகிப்பார்.

பார்லிமென்ட் வளாகத்தில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்பு பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், இடைக்கால அதிபரான ரணில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். மும்முனைப் போட்டியில் எம்பிக்கள் வாக்களித்து ரணில் தேர்வு செய்யப்பட்டார். இவரது தேர்வை எதிர்த்து நேற்றும் போராட்டக்காரர்கள் பார்லிமென்ட் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tap to resize

Latest Videos

இதற்கும் முன்பும் இதேபோன்று இலங்கை அதிபர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். 1993ல் ரணசிங்கே பிரேமதாசா கொல்லப்பட்ட பின்னர், வாக்கெடுப்பு மூலம் டிபி விஜேதுங்கா தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதற்கு முன்பும் நாட்டின் ஆறாவது அதிபராக ரணில் பதவி வகித்துள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் 20-25 வரையிலான அமைச்சர்கள் பொறுப்பேற்க இருக்கின்றனர். 

கலகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்… எச்சரிக்கை விடுத்த ரணில் விக்ரமசிங்க!!

ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றி பெறுவதற்கு முழு காரணம் ராஜபக்சே சகோதர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வாக்குகள்தான். கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே சகோதரர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தாலும், அரசியலில் இருந்து தங்களது அதிகாரம் வீழ்த்து விடக் கூடாது என்பதற்காக ரணிலுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்தக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்தாலும், ரணிலுக்கு கடுமையான சவால்கள் காத்துக் கொண்டு இருக்கின்றன. சர்வதேச நிதி ஆணையத்திடம் பெரிய அளவில் நிதி பெற்று நாட்டை மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கடந்த வாரம் சர்வதேச நிதி ஆணையத்திடம் பேசியதாகவும், பேச்சுவாத்தை சுமூகமாக முடிவாகும் தருவாயில் இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார். 

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு - மக்கள் ஏற்றார்களா இவரை?

இலங்கையையும், நாட்டு மக்களையும் குறைந்தளவாவது சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்கு 5 மில்லியன் டாலர் வரும் ஆறு மாதங்களில் தேவைப்படுகிறது. அப்போதுதான், உணவுப் பஞ்சம், எரிபொருள் சிக்கல், மருந்து தட்டுப்பாடு என்று அடிப்படை சிக்கல்களை தீர்க்க முடியும். 

இலங்கை அரசியலில் 50 ஆண்டுகளாக இருக்கும் ரணில் கட்சியால், 2020ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. நாடு பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகி, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த காரணத்தால், கடந்த மே மாதம் ரணில் பிரதமரானார். இந்தியாவுடன் எப்போது நெருக்கம் காட்டி வந்தவர். இவரது நட்பு இன்னும் தொடரும் என்று நம்பப்படுகிறது.

Swearing in of President Ranil Wickremesinghe. pic.twitter.com/R9v8tZD5om

— Jamila Husain (@Jamz5251)

வீழ்ச்சி:
வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கை பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. 55 பில்லியன் டாலருக்கு கடன்பட்டு, வட்டி கட்ட முடியாமல் திணறியது. இது நாட்டின் மீது பெரிய அளவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நிய செலாவணி இருப்பும் கரைந்தது. இறக்குமதி செய்வதற்கு நிதி இல்லாமல் இலங்கை அரசு திண்டாடியது. விலைவாசி அதிகரித்து பால், மருந்து கூட வாங்குவதற்கு முடியாமல் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டனர். வேலைவாய்ப்பை இழந்தனர். இது மக்களை போராட்டத்துக்கு தள்ளியது. எப்போது மீளும் இலங்கை என்று உலகமே உற்று நோக்கி வருகிறது.

click me!