நேட்டோ அமைப்பில் 31வது நாடாக பின்லாந்து இணைந்துள்ளது. இது உலக நாடுகளிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கமே 'NATO'. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு சோவியத் யூனியனின் அச்சம் காரணமாக 1949-ம் ஆண்டு நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.
சர்வதேச அளவில் மிகப்பெரிய ராணுவ அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நேட்டோ ஜனநாயக முறையில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், மோதலை தடுக்கவும் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு வழங்குகிறது.
நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 2020-ல் வடக்கு மேஸ்டோனியா என்ற நாடுதான் கடைசியாக நேட்டோவில் உறுப்பினராக இணைந்தது. இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து நாடு இணைந்துள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைய விண்ணப்பித்த காரணத்தினாலேயே ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
இதுபற்றி பேசிய நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், “நேட்டோ அமைப்பில் 31வது நாடாக பின்லாந்து இணைந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வாரம். வரும் மாதங்களில் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஹவிஸ்டோ, “இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம். பின்லாந்தைப் பொறுத்தவரை, ரஷ்யா தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடர்வதால், உக்ரைனின் நேட்டோ ஆதரவு நிலைப்பாட்டை வலியுறுத்துவது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
யூரோ - அட்லாண்டிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொள்கிறோம்” என்று பேசினார். பின்லாந்து தற்போது இணைந்துள்ள சூழலில் ரஷ்யா என்ன செய்யுமோ ? என்பதே உலக நாடுகளிடையே தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க..ஒரிஜினல் ட்விட்டர் லோகோ எவ்வளவு விலைக்கு வாங்குனாங்க தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!