துருக்கி நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த அதிசயக் குழந்தையின் தாய் 54 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அனைவரையுன் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துருக்கி நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த அதிசயக் குழந்தையின் தாய் 54 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அனைவரையுன் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் பல மணி நேரத்திற்கு மீட்பு படையினரால் மீட்கப்பட்டன. அப்படி மீட்கப்பட்ட குழந்தை ஒன்று பல மில்லியன் இதயங்களை வென்றது. அந்த குழந்தை சுமார் 128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதனை அதிசயக் குழந்தை என்று அனைவரும் அழைத்தனர். ஆனால் அவரது தாயார் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்தளை கண்டுபிடிப்பு! விண்வெளி ஆய்வில் ஒரு மைல்கல்!
ஆனால் தற்போது அவரது தாயார் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோ உறுதிப்படுத்தியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், துருக்கியில் நிலநடுக்கத்தில் 128 மணிநேரத்திற்கு பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து குழந்தை ஒன்று மீட்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்த குழந்தையின் தாய் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார். அவர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். 54 நாட்களுக்கு பிறகு அவர் கண்டறியப்பட்டு டிஎன்ஏ சோதனைக்குப் பிறகு, அவர்கள் ஒன்று சேர்ந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விசாரணைக்கு ஆஜராகும் டிரம்ப்! தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை!
அவரது இந்த டிவிட்டர் பதிவு 5.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் இதுக்குறித்து நெட்டிசன்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு பயனர், இதை மற்றொரு அதிசயம் என்று அழைத்தனர். அருமையான செய்தி. அவர்கள் இருவரும் உயிர் பிழைத்து ஒருவரோடு ஒருவர் திரும்பி வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதைப் பகிர்ந்ததற்கு நன்றி என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
You probably remember this picture of the baby who spent 128 hours under rubble after an earthquake in Turkey. It was reported that the baby's mom died.
Turns out, the mom is alive! She was treated in a different hospital. After 54 days apart and a DNA test, they are together… pic.twitter.com/T7B0paUFxL