சூரியனை விட 33 பில்லியன் மடங்கு பெரிய கருந்தளை கண்டுபிடிப்பு! விண்வெளி ஆய்வில் ஒரு மைல்கல்!

By SG Balan  |  First Published Apr 3, 2023, 3:10 PM IST

அமெரிக்காவில் டர்ஹாம் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் புதிதாக இதுவரை காணாத அளவுக்கு பிரம்மாண்டமான கருந்துளைக் கண்டுபிடித்துள்ளனர்.


பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகள்தான் விண்வெளி ஆராய்ச்சியில் புரிதாக புதிராக விளங்கி வருகிறது. இதுநாள் வரை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ள இயற்பியல் விதிகள் எதுவும் கருந்துளைகளுக்குப் பொருந்தக்கூடியவை அல்ல என்பதுதான் அவற்றை மர்மம் நிறைந்தவையாக வைத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகம் பிரம்மாண்டமான கருந்துளை ஒன்றைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. அந்தக் கருந்துளை இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய கருந்துளையாக இருக்கிறது என்றும் சூரியனின் அளவைவிட 33 பில்லியன் மடங்கு பெரியது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

Latest Videos

undefined

விசாரணைக்கு ஆஜராகும் டிரம்ப்! தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை!

டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் ஆய்வாளர் டாக்டர் ஜேம்ஸ் நைட்டிங்கேல் புதிய கருந்துளை கண்டுபிடிப்பைப் பற்றி பேசுகையில், "நமது சூரியனை விட சுமார் 30 பில்லியன் மடங்கு பெரியது. இந்த கருந்துளை, இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய கருந்துளை ஆகும். இது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு" என்று சொல்கிறார்.

விஞ்ஞானிகள் புவியீர்ப்பு லென்சிங்கைப் பயன்படுத்தியபோது கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் உள்ள கேலக்ஸியை மாபெரும் பூதக்கண்ணாடியால் பெரிதுபடுத்திப் பார்த்தபோது இந்த பிரம்மாண்டமான கருந்துளைக் கண்டுள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

"நமக்குத் தெரிந்த மிகப் பெரிய கருந்துளைகளில் பெரும்பாலானவை செயலில் உள்ளன. கருந்துளைக்கு அருகில் இழுக்கப்பட்ட பொருள் வெப்பமடைந்து ஒளி, எக்ஸ்-கதிர்கள் மற்றும் பிற கதிர்வீச்சு வடிவத்தில் ஆற்றலை வெளியிடும். செயலற்ற கருந்துளைகளை ஆய்வு செய்வது ஈர்ப்பு விசை லென்சிங் மூலம் சாத்தியம் ஆகிறது. ஆனால், தொலைதூர கேலக்ஸிகளில் தற்போது அது சாத்தியமில்லை" என டாக்டர் நைட்டிங்கேல் தெரிவிக்கிறார்.

மிகப்பெரிய கருந்துளைகள் அரிதானவை என்றும் அவற்றின் தோற்றம் தெளிவாக இருப்பதில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரபஞ்சம் இளமையாக இருந்தபோது, கேலக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தபோது அவை உருவானதாக சில  நம்புகின்றனர்.

சீனாவில் காதலில் விழுவதற்கு ஒரு வாரம் விடுமுறை! மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம்!

click me!