பயங்கரவாதிகள் தான் எங்க டார்கெட்... பாகிஸ்தான் இல்ல... சீனாவில் மாஸ் காட்டிய சுஷ்மா ஸ்வராஜ்!!

By sathish kFirst Published Feb 27, 2019, 2:30 PM IST
Highlights

பயங்கரவாத அமைப்புகள் மீது சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். இந்த தாக்குதலை மறுப்பது மட்டுமில்லாமல், ஜெய்ஷ் இ முகம்மது மீதான குற்றச்சாட்டுகளையும் பாகிஸ்தான் மறுத்து வருகிறது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் ஆக்கிரமிப்பு எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை நேற்று அதிகாலை  வெறும் 21 நிமிட அதிபயங்கர தாக்குதலில் 400 தீவிரவாதிகள் வரை பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டுள்ளது.

 நடத்திய தாக்குதல் குறித்து நேற்று எதிர்க்கட்சிகள் முன்னிலையில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று  ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் 16 வது ஆலோசனை கூட்டம் சீனாவின் உகான் நகரில் நடைபெற்றது.  

அதில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு சமீபத்தில் புல்வாமாவில் பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்தியது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தரும் நாடுகள் மீது ஐநாவும் மற்ற நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 40க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளது இந்தியா. பயங்கரவாதத்தை கொஞ்சமும் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்பதை புல்வாமா தாக்குதல் மூலம் மொத்த நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் மீது சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். இந்த தாக்குதலை மறுப்பது மட்டுமில்லாமல், ஜெய்ஷ் இ முகம்மது மீதான குற்றச்சாட்டுகளையும் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. 

பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. இந்தியா நடத்தியது ராணுவ நடவடிக்கை இல்லை, பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்தியா குறிவைக்கவில்லை, பதற்ற நிலையை அதிகரிக்க இந்தியா விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

click me!