இனி இந்தியாவுக்கு விழப்போற அடியை மட்டும் பாருங்க... கொக்கரிக்கும் பாகிஸ்தான்..!

By vinoth kumarFirst Published Feb 26, 2019, 1:21 PM IST
Highlights

இந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது என மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

கடந்த 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அனுகூலமான நாடு அந்தஸ்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியது. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலானது தற்காப்பிற்காக மட்டுமே என்று இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார். மேலும் இந்திய விமானப்படை தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே தகர்க்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் புகார் கூறியுள்ளது. மேலும் பாகிஸ்தான் நாட்டை தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. இந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

click me!