ரோலக்ஸ் வாட்ச் வாங்க இவ்வளவு போராட்டமா? அடேங்கப்பா.! வேற லெவல் தகவலா இருக்கு !!

By Raghupati R  |  First Published Dec 12, 2022, 10:55 PM IST

ரோலக்ஸ் கடிகாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை உருவாக்க சுமார் ஒரு வருடம் ஆகும். ஒவ்வொரு கடிகாரமும் சுவிட்சர்லாந்தில் மிகவும் சிரமப்பட்டு கையால் தயாரிக்கப்படுகிறது. ரோலக்ஸ் உலகின் மிக விலையுயர்ந்த துருப்பிடிக்காத ஸ்டீலைப் பயன்படுத்துகிறது, இது 904L என்றும் அழைக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சுவிஸ் கைக்கடிகாரங்களின் சில்லறை விற்பனையாளரின் உரிமையாளரான செட்டிகி ஹோல்டிங் இதுபற்றி கூறும்போது,அரச குடும்பத்தார் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஒரு கடிகாரத்தை விரும்பினால், அவர்கள் அதைப் பெறுவார்கள்.

Tap to resize

Latest Videos

ஆனால் அவர்கள் கடிகாரங்களை பரிசாகக் கொடுக்கத் தேடுகிறார்கள் என்றால் கிடைக்காது என்று கூறினார். ரோலக்ஸ் கடிகாரங்களை சிலர் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார். சரியான நபர்களுக்கு அதை வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க.. 2023ல் பெரும் போர் மட்டுமா! இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !! நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !

துபாய் எமிரேட்டில் உள்ள ஒரே அங்கீகரிக்கப்பட்ட ரோலக்ஸ் விநியோகஸ்தர் மற்றும் உலகின் மிகப்பெரிய ரோலக்ஸ் ஸ்டோரை நடத்தும் நிறுவனமான அஹ்மத் செடிகி & சன்ஸ் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று ஆகும். சுவிஸ் வாட்ச் தொழில்துறையானது கடந்த இரண்டு வருடங்களில் தேவை அதிகரித்து வருவதோடு, ஏற்றுமதியின் மதிப்பின் அடிப்படையில் அதன் சிறந்த ஆண்டை எட்டியுள்ளது.

அக்டோபர் வரை, சுவிஸ் வாட்ச் தொழில்துறை கூட்டமைப்பு படி, துறையின் 30 பெரிய சந்தைகளில் சுவிஸ் வாட்ச் ஏற்றுமதியின் மதிப்பு கடந்த ஆண்டு இதே காலத்தை விட 13.3% அதிகமாக இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வளர்ச்சி அதை விட சற்று அதிகமாக 13.8% ஆக உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஒரு வாட்ச் கிடைக்கும் என்ற நிலையை அடைந்துவிட்டோம். நாங்கள் ஒரு கிளையண்டை அழைத்து எங்களிடம் ஒரு வாட்ச் இருக்கிறது என்று கூறுகிறோம். வருபவர்கள் என்ன மாடல் என்று கூட கேட்பதில்லை. நமக்கு எது கிடைத்தாலும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இதையும் படிங்க.. பெரிய தூண்டில் போட்ட ஓபிஎஸ்.. குஜராத் டூர் சக்சஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ‘அந்த’ போட்டோ !

1960 இல் தனது முதல் கடையைத் திறந்த Seddiqi & Sons, இப்போது நாட்டில் 50 க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகிறது. உலகின் மிகப்பெரிய ரோலக்ஸ் ஸ்டோர் கடைகளில் ஒன்று துபாய் மாலில் உள்ளது. ரோலக்ஸ் பொட்டிக்குகளில், காட்டப்படும் பெரும்பாலான கடிகாரங்கள் காட்சிக்காக மட்டுமே உள்ளன. விற்பனைக்கு அல்ல. கடையில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மட்டுமே இருப்பு இருக்கும்.

நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் முக்கால்வாசி பேர் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் இந்தியா, சீனா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர்களும் இதில் அடங்குவார்கள். தற்போதைய நிலையில் துபாயில் ரோலக்ஸ் வாட்ச்களுக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க.. 3 வருடங்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண்.. வேதனையில் கலெக்டருக்கு மனு !

click me!