நிலவில் இருந்து பூமிக்கு திரும்பியது ஓரியான் விண்கலம்... பாராசூட் உதவியுடன் கடலில் இறங்கியது!!

By Narendran S  |  First Published Dec 11, 2022, 11:45 PM IST

சந்திரனுக்கு பயணம் மேற்கொண்ட நாசாவின் ஓரியான் விண்கலம், கலிஃபோர்னியாவிற்கு அருகே உள்ள பசிஃபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 


சந்திரனுக்கு பயணம் மேற்கொண்ட நாசாவின் ஓரியான் விண்கலம், கலிஃபோர்னியாவிற்கு அருகே உள்ள பசிஃபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. முன்னதாக கடந்த 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அப்போது அமெரிக்க விண்வெளி வீரரான நீல் அமஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். 1972 டிசம்பர் 11ஆம் தேதி அப்போலோ 17 திட்டத்தின் மூலம் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் பூமிக்கு வந்தனர்.

இதையும் படிங்க: பாலியல் நோய் பரவலை தடுக்க நூதன அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்..!!

Latest Videos

undefined

அதன் பின் மனிதர்கள் யாரும் நிலவிற்கு செல்லவில்லை. இந்த நிலையில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதாவது 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ். அந்த வகையில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் ஓரியா விண்கலம் நவம்பர் 16 ஆம் தேதி நாசாவால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதையும் படிங்க: எலான் மஸ்க்கை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. உலகம் முழுவதும் முடங்கிய ட்விட்டர் !

நாசாவின் ஸ்பேஸ் லான்ச் வெஹிகில் (NASA SLS) ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இதை அடுத்து ஓரியான் விண்கலம் நிலவில் இருந்து மீண்டும் இன்று பூமிக்கு திரும்பியது. சந்திரனைச் சுற்றி மூன்று வார பயணத்தை மேற்கொண்டுள்ள ஓரியான் விண்கலம், கலிஃபோர்னியாவிற்கு அருகே உள்ள பசிஃபிக் பெருங்கடலில் தரையிறங்கியது. சரியாக 50 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் நிலவுக்குச் சென்ற ஓரியான் விண்கலம் பூமிக்குத் திரும்யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Artemis I: Or, To the Moon and Back Again. 🚀

Live coverage of our spacecraft’s return to Earth will begin at 11am ET (1600 UTC) on Dec. 11, with splashdown in the Pacific Ocean near Guadalupe Island at 12:39pm ET (1739 UTC). Watch it live: https://t.co/7hsnUGlwJs pic.twitter.com/IgcSctF36D

— NASA (@NASA)
click me!