பாகன் நீரில் மூழ்குவதாக நினைத்து ஆற்றில் இறங்கிய குட்டி யானை : வைரலாகும் வீடியோ

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 05:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பாகன் நீரில் மூழ்குவதாக நினைத்து ஆற்றில் இறங்கிய குட்டி யானை : வைரலாகும் வீடியோ

சுருக்கம்

யானைப் பாகன் ஒருவன் ஆற்றில் மூழ்குவதாக நினைத்து அவரைக் காப்பாற்ற குட்டியானை ஒன்று ஆற்றுக்குள் வேகமாக இறங்கி சென்ற சம்பவத்தை பார்த்தவர்கள் பெரும் ஆச்சரியத்துக்கு ஆளானார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தாய்லாந்து வடக்கு பகுதியில், யானை காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு டாரிக் என்பவர் யானை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அங்குள்ள காம் லா என்ற குட்டி பெண் யானையை, பாசத்துடன் பராமரித்து வருகிறார். குட்டியானையும், தனது பயிற்சியாளரான டாரிக்குடன் அதிக பாசத்துடன் பழகி வருகிறது.

இந்த நிலையில், அருங்காட்சியகம் ஆற்றில் யானை பயிற்சியாளர் டாரிக் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த குட்டியானையோ, பாகன் தண்ணீருக்குள் இருப்பதால், உதவி தேவைப்படுவதாக கருதி, ஆற்றுக்குள் வேகமாக இறங்கி உள்ளது அந்த குட்டி யானை.

பின்னர் டாரிக்கிடம் வந்த குட்டியானை, அவரை தனது துதிக்கையால் தழுவி, கரைக்கு தள்ளிக் கொண்டு வந்தது. இந்த சம்பவம் கறித்து விலங்கு நல ஆர்வலர் ஒருவர் பேசுகையில், விலங்குகளிடம் நாம் அதிகம் பாசத்தைக் காண்பித்தால் அதே அன்பை விலங்குகளும் வெளிப்படுத்தும் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!