ஹிட்லர் பிறந்த வீட்டை இடிக்க ஆஸ்திரிய அரசு திட்டம்!

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 05:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
ஹிட்லர் பிறந்த வீட்டை இடிக்க ஆஸ்திரிய அரசு திட்டம்!

சுருக்கம்

ஜெர்மனியில் கொடுங்கோல் ஆட்சிபுரிந்த ஹிட்லர் பிறந்த வீட்டை இடித்து தள்ள ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. 

Nazi படையை உருவாக்‍கி லட்சக்‍கணக்‍கான யூதர்களை கொன்று குவித்து, ஜெர்மனியில் கொடுங்கோல் ஆட்சிபுரிந்த Adolf Hitler 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி ஜெர்மனியின் எல்லையையொட்டி அமைந்துள்ள Braunau am inn என்ற நகரில் பிறந்தார். இந்த நகரம் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ளது.

ஜெர்மனியை ஆண்டபோது 1938-ம் ஆண்டு ஆஸ்திரியாவை வலுக்‍கட்டாயமாக ஜெர்மனியுடன் இணைத்துக்‍கொண்ட ஹிட்லர், அந்நாட்டு மக்‍களை மிகுந்த தொல்லைகளுக்‍கு உட்படுத்தினார். பல ஆண்டுகளுக்‍கு நீடித்த இன்னலில் இருந்து விடுபட்ட ஆஸ்திரிய அரசுக்‍கு, ஹிட்லர் மீதான கோபம் இன்னும் தணியவில்லை. மேலும், Nazi ஆதரவாளர்கள் ஹிட்லர் பிறந்த வீட்டை ‍காண புனித யாத்திரை போல வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக, ஹிட்லர் பிறந்த வீட்டை இடித்து தள்ளிவிட்டு, அங்கு புதிய கட்டடம் கட்டி சமுதாயக்‍ கூடம் அல்லது அறக்‍கட்டளைப் பணிக்‍கு பயன்படுத்த ஆஸ்திரிய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை ஆஸ்திரிய உள்நாட்டு அமைச்சரும் உறுதி செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!