இத்தாலியில் அடுத்தடுத்து சக்‍திவாய்ந்த நிலநடுக்‍கம் : கட்டிடங்கள் குலுங்கின

First Published Oct 27, 2016, 11:52 PM IST
Highlights


இத்தாலி நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்‍கிவாய்ந்த நிலநடுக்கங்களால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.

இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் அந்நாட்டின் மத்தியப் பகுதிகளில் நேற்றிரவு சக்‍திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகளும், கட்டடங்களும் குலுங்கின. அடுத்த 2 மணி நேர இடைவெளியில் மீண்டும் சக்‍தி வாய்ந்த நிலடுக்‍கம் ஏற்பட்டது. இது, ரிக்‍டர் அளவு கோலில் 6 புள்ளி ஒன்றாக பதிவானது.

இந்த இரு நிலடுக்‍கங்களால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. ரோம் நகரில் பழமையான கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், மின் இணைப்புகளும் துண்டிக்‍கப்பட்டுள்ளன. இதனால் அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். Visso நகரில் பழமையான தேவாலயங்கள் இடிந்து விழுந்தன. பள்ளிகளுக்‍கு இன்று விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்‍கத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.

இத்தாலி நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ரிக்‍டர் அளவுகோலில் 6 புள்ளி 2 பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல நகரங்கள் பெரும் சேதமடைந்தன. 298 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

click me!