நெருப்புடன் விளையாட வேண்டாம்... அமெரிக்காவை ஏறி அடித்த ஜி ஜின்பிங்... வெலவெலத்துப் போன பிடன்

By Ezhilarasan Babu  |  First Published Jul 29, 2022, 12:49 PM IST

நெருப்புடன் விளையாட வேண்டாம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்காவை எச்சரித்துள்ளார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு  கூறியுள்ளார். 


நெருப்புடன் விளையாட வேண்டாம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்காவை எச்சரித்துள்ளார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு  கூறியுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் சீனாவில் ஒருங்கிணைந்த பகுதி என பல ஆண்டுகளாக சீனா கூறி வருகிறது, ஆனால் சீனாவின் இந்த கூற்றை எதிர்த்து தைய்வான் சீனாவுக்கு எதிராக போராடி வருகிறது, தைவான் தனி சுதந்திர நாடு என்றும் அதை சீனா ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்றும் தைவான் நாட்டு அதிபர் கூறிவருகிறார்.  அமெரிக்காவும் தைவானுக்கு ஆதரவாக பேசி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் சீனாவும்  தைவானை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றக் கீழவை தலைவர் நான்சி பெலோசி தைவான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் இந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, இந்நிலையில்கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையே ஐந்து முறை சுமார் 2 மணி நேர உரையாடல் நடந்துள்ளது. அந்த உரையாடலின் போது தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும்,  தைவானில் சுதந்திரத்தை ஆதரிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் சீனா அதை கடுமையாக எதிர்க்கும், சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது சீனாவில் ஒன்றரை மில்லியன் மக்களில் விருப்பமாக உள்ளது என்றும், சீன அதிபர் ஜீ ஜின்பிங் கூறினார்.

இதையும் படியுங்கள்: தடைகளை எல்லாம் வாய்ப்புகளாக மாற்றி இந்தியா முன்னேறி வருகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

தொடர்ந்து பேசிய அவர் சீன மக்களின் இந்த ஆசைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை சீனா தீவிரமாக எதிர்க்கும் மற்றும்  நான்சி பெலோசி தைவான் பயணம் குறித்து பேசிய ஜி ஜின்பிங் இதை செய்வதன் மூலம் அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது என்று அர்த்தம், நெருப்புடன் விளையாடுபவர்கள் அதில் எரிந்து போவார்கள் என்பதற்கு வரலாறு சாட்சி என்றும் ஆவேசமாக கூறினார், பெலோசி பயணம் குறித்து அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்றும் தான் நம்புவதாகவும் சீனா தனது கொள்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது என்றும், பொலோசி தேவானுக்கு சென்றால் அது ஆத்திரமூட்டும் செயலாக கருதப்படும் என்றும் இதற்கு அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

தற்போது உலகம் அமைதியின்மை மற்றும் மாற்றத்திற்கான காலகட்டத்தை சந்தித்து வருகிறது, இத்தகைய சூழ்நிலையில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து உலகை அமைதியை நிலைநாட்டவும், உலக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் செயல்பட வேண்டும் என உலக மக்கள் எதிர்பார்க்கின்றனர், இந்த உலகளாவிய பொறுப்பை இருநாடுகளும் முன்னின்று செய்ய வேண்டும், தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது ஏற்கனவே உலகுக்கு தெரியும், அதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜி ஜின்பிங் கூறினார்.

இதையும் படியுங்கள்: diamond price: விறகு எடுக்கச் சென்ற பெண்ணுக்கு கூரையைப் பிய்த்து கொட்டிய அதிர்ஷ்டம்: என்ன அது?

இந்த தொலைபேசி உரையாடலின்போது ஒருபோதும் தைவானில் சுதந்திரத்தை தான் ஆதரிக்க மாட்டோம் என்றும் ஒருபோதும் அதை ஆதரிக்க போவதும் இல்லை என்றும் பிடன் அப்போது உறுதி அளித்துள்ளார், ஒருங்கிணைந்த சீனா என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும், எதிர்காலத்தில் இரு தலைவர்களும் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார். 
 

click me!