உயிரை பணயம் வைத்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க!

By Dinesh TG  |  First Published Aug 27, 2024, 8:34 AM IST

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்கு திடமிடப்பட்ட பயணம், மாதக்கணக்கில் நீள்கிறது. உயிரை பணயம் வைத்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? இதோ..
 


உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் மிகவும் திறமையான விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் பெற முடியும்? சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் போதும், அங்கிருந்து பூமிக்குத் திரும்பும் போதும் எப்போதும் உயிருக்கு பயந்து கொண்டே இருக்கும் விஞ்ஞானிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் இருக்கலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

ஆனால் அப்படி இல்லை. இங்கு சம்பளத்துடன் வாழ்நாளில் கிடைக்கும் அரிய வாய்ப்பும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் விண்வெளி வீரர்களை விட அதிக சம்பளத்தை பல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளே பெறுகிறார்கள். மேலும் விண்வெளி வீரர்களின் சம்பளம் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும் பொறுத்தது.

யாருக்கு எவ்வளவு சம்பளம்?

உதாரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று அங்கேயே சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பலருக்கு கடந்த ஆண்டு சம்பள வரம்பின்படி ஆண்டுக்கு ரூ.70 லட்சம் முதல் ரூ.1.27 கோடி வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பளம் ராணுவத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு சற்று குறைவாகவே இருக்கும். காரணம், பயணத்திற்குப் பிறகு அவர்கள் ராணுவத்தில் தங்கள் பதவியில் தொடர்கிறார்கள். உதாரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா சாரியின் மாதச் சம்பளம் ரூ.8.92 லட்சம்.

மேலும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர்களுக்கு, ஆரம்ப கட்டத்தில் மாதம் ரூ.5.50 லட்சம், பிரிட்டன் விண்வெளி வீரர்களுக்கு ரூ.5.86 லட்சம், பிரான்ஸ் விண்வெளி வீரர்களுக்கு ரூ.7.23- 8.43 லட்சம், ரஷ்யா விண்வெளி வீரர்களுக்கு ரூ.4.58 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்! பூமி திரும்புவது எப்போது? போயிங் ஸ்டார்லைனருக்கு என்ன ஆச்சு?

இது தவிர, விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு நாடுகள் ஒவ்வொரு விமானத்திற்கும் தனி போனஸ் மற்றும் பிற கொடுப்பனவுகளையும் வழங்குகின்றன.

பெயர்/நாடு சம்பளம்

  • சுனிதா வில்லியம்ஸ் ரூ.70 லட்சம் - ரூ.1.27 கோடி (ஆண்டு)
  • ராஜா சாரி ரூ.8.92 லட்சம் (மாதம்)
  • ஐரோப்பா ரூ.5.50 லட்சம் (மாதம்)
  • பிரிட்டன் ரூ.5.86 லட்சம் (மாதம்)
  • பிரான்ஸ் ரூ.7.23- 8.43 லட்சம் (மாதம்)
  • ரஷ்யா ரூ.4.58 லட்சம் (மாதம்)

Latest Videos

Sunita Williams & Wilmore 2025 வரை பூமிக்கு திரும்ப முடியாது! -எவ்வளவு நாட்கள் விண்வெளியில் தங்க முடியும்?
 

click me!