மர்மங்களைச் சுமந்து நிற்கும் அல் நஸ்லா பாறை! பூமிக்கு வந்த ஏலியன்கள் செய்த வேலையா?

By SG BalanFirst Published Aug 25, 2024, 10:39 PM IST
Highlights

வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியன் தங்களிடம் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி அல் நஸ்லா பாறையை வெட்டியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

சவுதி அரேபியாவின் ஒயாசிஸில் உள்ள புவியியல் அதிசயம் ஒன்று விஞ்ஞானிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அதுதான் மிதக்கும் பாறை என்று அழைக்கப்படும் அல் நஸ்லா பாறை. இந்தப் பாறை சுமார் 4,000 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது இயற்கையின் மர்மமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பாறையின் நடுவில் காணப்படும் பிளவு வெட்டி எடுத்தது போல துல்லியமாக உள்ளது. இந்த அல் நஸ்லா பாறையின் தோற்றம் பற்றிய கணிப்புகள் புவியியல் வல்லுனர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

Latest Videos

அல் நஸ்லா பாறை இரண்டு பெரிய கற்பாறைகளை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் இயற்கையான பீடங்களின் மேல் அமைந்துள்ளது. பல கோட்பாடுகள் அல் நஸ்லா பாறையின் புதிரான பிளவை விளக்க முயல்கின்றன.

பாதியில் கைவிட்ட ஜிபிஎஸ் சிக்னல்; சவுதி பாலைவனத்தில் வழிதவறிச் சென்ற இந்தியர் மரணம்!

அல் நஸ்லா பாறை ஏலியன்களால் வெட்டப்பட்டன என்ற கணிப்பு சுவாரஸ்யமானது. வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியன் தங்களிடம் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி இந்தப் பாறையை வெட்டியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

பூமியின் மேலோட்டத்தில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் இந்தப் பிளவை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வண்டல் மற்றும் மணல் சீரற்ற விரிசலில் நிரப்பப்பட்டிருக்கலாம். இதன் விளைவாக இப்போது உள்ளதைப் போன்ற சீரான தோற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

பாறைகளில் இயற்கையாகவே இதுபோன்ற பிளவுகள் உண்டாகும் என்றும் தொடர்ந்து பல ஆண்டுகளாக இயற்ககையான அரிப்பு மற்றும் வண்டல் படிவு ஆகியவற்றால் காலப்போக்கில் பிளவு மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அல் நஸ்லா பாறையின் வசீகரத்திற்கு இன்னொரு காரணம் அதன் மேற்பரப்பில் பொறிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள். இந்த சிற்பங்கள் அரேபிய குதிரைகள், ஐபெக்ஸ் மற்றும் மனித உருவங்கள் கொண்ட காட்சிகளைச் சித்தரிக்கின்றன. இவை இந்தப் பாறையின் மர்மத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் டைமா சோலையில் வசித்த மக்களின் வாழ்க்கை மற்றும் நம்பிக்கைகள் பற்றிய கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.

தற்காப்புக்காக லெபனானைத் தாக்கிய இஸ்ரேல்... ராக்கெட் மழை மொழிந்து பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா!

click me!