தற்காப்புக்காக லெபனானைத் தாக்கிய இஸ்ரேல்... ராக்கெட் மழை மொழிந்து பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா!

By SG Balan  |  First Published Aug 25, 2024, 4:07 PM IST

இஸ்ரேலிய ராணுவம் லெபனானில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாவும் நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.


லெபனானைச் சேரந்த பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் ராணுவமும் ஒருவருக்கொருவர் வான்வழித் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா குழு இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளங்களைக் குறிவைத்து 320 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியதாகத் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே இஸ்ரேலிய ராணுவம் லெபனானில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாவும் நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

Tap to resize

Latest Videos

undefined

ஞாயிறுக்கிழமை காலையிலேயே இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ஹெஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதைக் கண்டறிந்ததாகவும் அதனால் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லாவின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேலியப் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது.

தெற்கு லெபனானில் இருந்து வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேலை தாக்குவதற்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஹெஸ்புல்லா ராக்கெட் லாஞ்சர்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. விமானப்படையின் சுமார் 100 போர் விமானங்கள் ஹெஸ்பொல்லா ராக்கெட் லாஞ்சர் பீப்பாய்களைத் தாக்கி அழித்தன என்று இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசா, பாஸ்போர்ட் எதுவும் இல்லாமலே வெளிநாட்டுப் பயணம்! இந்தியர்களை வரவேற்கும் நாடுகள்!!

ஹெஸ்பொல்லாவும் அதன் நட்பு நாடான ஈரானும் கடந்த மாதம் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்ரின் படுகொலைக்குப் பழிவாங்குவதாக அறிவித்திருந்தன. இதனால் லெபனான், இஸ்ரேல், ஈரான் இடையே பதற்றநிலை அதிகரித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் தாக்குதல் நடந்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. சில விமானங்கள் தாமதமாகின.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் சீன் சாவெட், அமெரிக்கா இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை தொடர்ந்து ஆதரிப்பதாகவும் மூத்த அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து இஸ்ரேலுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே வெடித்த காசா போரின் தொடர்ச்சியாகும். இஸ்ரேல்-லெபனான் எல்லையில் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சூடுகள் நடக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். இதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் நிலைகள் மூலம் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தியது. இதில் 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐபோன் 16 சீரிஸ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! கூடவே களமிறங்கும் புதிய ஏர்பாட், ஆப்பிள் வாட்ச்!

click me!