தொலைந்து போன 8 வயது சிறுமி.. ATM உதவியுடன் எப்படி குடும்பத்துடன் இணைந்தார்?

By Ramya s  |  First Published Aug 24, 2024, 12:22 PM IST

சீனாவில், 8 வயது சிறுமி ஒருவர் நடன வகுப்பிலிருந்து வீடு திரும்பும் போது தனது தாத்தாவிடமிருந்து பிரிந்துவிட்டார். மொபைல் போன் இல்லாத அச்சிறுமி, அருகிலிருந்த ஏடிஎம்மில் உள்ள அவசர பட்டனை அழுத்தி வங்கி ஊழியரின் உதவியுடன் தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு மீண்டும் இணைந்தார்.


தென்கிழக்கு சீனாவில் உள்ள Zhejiang மாகாணத்தில் உள்ள Quzhou பகுதியைச் சேர்ந்த 8 வயது இளம்பெண், நடன வகுப்பிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் தனது தாத்தாவை பிரிந்துவிட்டார். மொலை போன் இல்லாமல், தெரியாத நபர்களின் உதவி இல்லாமல் தனது குடும்பத்தினருடன் இணைந்தார். அச்சிறுமி தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட விதம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது.

முதலில் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல், சிறுமி கவலையடைந்தார். இருப்பினும், அருகில் உள்ள ஏடிஎம் சாவடியை கவனித்த அவர், வங்கியின் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கும் இயந்திரத்தின் அருகே உள்ள சிவப்பு பட்டனை அழுத்தினார். Quzhou Rural Commercial வங்கியின் ஊழியர் Zhou Dongying, இண்டர்காம் அமைப்பு மூலம் சிறுமியின் அழைப்பிற்கு பதிலளித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

"உங்கள் தாத்தாவின் தொலைபேசி எண் உங்களிடம் உள்ளதா?" என்று வங்கி ஊழியர் கேட்டாள், ஆனால் அந்த சிறுமிக்கு தனது தாத்தாவின் போன் நம்பரோ அல்லது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் தொலைபேசி எண்களை நினைவுபடுத்த முடியவில்லை. அப்போது போலீஸை எச்சரித்த வங்கி ஊழியர், தொடர்ந்து ஆறுதல்படுத்தியபடியே இருக்கச் சொன்னாள். மேலும் அச்சிறுமியிடம் "இங்கே இருங்கள், நகர வேண்டாம், போலீசார் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.

உங்களுக்ககெல்லாம் சோறு போட்டது குத்தமா? உரிமையாளர்களின் கதையை முடித்த செல்ல பிராணிகள்

கைஹுவா கவுண்டி பொதுப் பாதுகாப்புப் பணியகத்தின் காவல் நிலையத்தின் அதிகாரிகள் விரைவில் வந்து அந்த சிறுமியை மீட்டு அவரின் தாத்தா உடன் சேர்த்தனர்.

ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோவில் உள்ள பல உள்ளூர் ஏடிஎம் நிலையங்களில், இயந்திரத்திற்கு அருகில் இரண்டு வகையான அவசர உதவி பட்டன்கள் உள்ளன. ஒரு "அவசர அழைப்பு" பட்டன், மற்றும் சிவப்பு "அவசர எச்சரிக்கை" பட்டன். அவசர அழைப்பு பட்டனை அழுத்துவன் மூலம் வங்கியின் கண்காணிப்பு மையத்துடன் மக்களுக்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது.

மறுபுறம், அலாரம் பட்டன், ஏடிஎம்மில் அவசர காலங்களில் போலீசாரை விரைவாக எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும், சிறுமியின் மன பாராட்டியதுடன், ஏடிஎம்-ஐப் பயன்படுத்தியதில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்..

பயனர் ஒருவர் "அச்சிறுமி மிகவும் புத்திசாலி," என்று ஒருவர் கூறினார்.

மற்றொரு பயனர் “ஏடிஎம்-ஐ இப்படிப் பயன்படுத்தலாம் என்பதை நான் அறிவது இதுவே முதல் முறை. புத்திசாலி சிறுமி. அன்பான ஊழியர்களுக்கு பாராட்டுக்கள், ”என்று கூறினார்.

3-வது பயனர் "நான் இந்த குழந்தையைப் போல புத்திசாலி இல்லை என்று உணர்கிறேன். நான் இன்று ஒரு புதிய அவசரத் திறனைக் கற்றுக்கொண்டேன், ”என்று பதிவிட்டுள்ளார். 

Visa Rejections | விசா ரிஜெக்ட் ஆயிடுச்சா! இந்த 7 தவறுகள்தான் காரணமாக இருக்கும்! கொஞ்சம் கவனியுங்க!

சீனாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதன்முறையல்ல. பிப்ரவரி 2021 இல், மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒரு பல்பொருள் அங்காடியில் தனது தாயிடமிருந்து பிரிந்து அவசரகால ஏடிஎம் பட்டனை பயன்படுத்தி இறுதியில் அவனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!