பாதியில் கைவிட்ட ஜிபிஎஸ் சிக்னல்; சவுதி பாலைவனத்தில் வழிதவறிச் சென்ற இந்தியர் மரணம்!

By SG BalanFirst Published Aug 25, 2024, 8:23 PM IST
Highlights

650 கிலோமீட்டருக்கு மேல் நீண்டு கிடக்கும் ரப் அல் காலி பாலைவனம் சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளிலும் அதன் அண்டை நாடுகளிலும் பரவியுள்ளது.

தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் சவூதி அரேபியாவின் ரப் அல் காலி பாலைவனத்தில் வழிதவறிச் சென்றதால், உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சவூதி அரேபியாவில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவர் கரீம்நகரைச் முகமது ஷெஷாத் கான் என்று தெரியவந்துள்ளது. உலகின் மிக ஆபத்தான பகுதிகளில் ஒன்றான ரப் அல் காலி பாலைவனத்தின் வெறிச்சோடிய பகுதியில் நாள்கணக்கில் சிக்கி தவித்திருக்கிறார்.

Latest Videos

650 கிலோமீட்டருக்கு மேல் நீண்டு கிடக்கும் ரப் அல் காலி பாலைவனம் சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளிலும் அதன் அண்டை நாடுகளிலும் பரவியுள்ளது.

குடை பிடித்தபடி ரயில் தண்டவாளத்தில் தூக்கம் போட்ட முதியவர்! வைரலாகும் விநோத சம்பவம்!!

தன்னுடன் பணிபுரியும் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பயணித்த ஷெஷாத் தான் பயன்படுத்திய ஜிபிஎஸ் கருவியில் சிக்னல் செயலிழந்ததால், வழிதவறிச் சென்றுள்ளார். ஷெஹ்சாத்தின் மொபைல் போன் பேட்டரியும் தீர்ந்து ஆஃப் ஆகிவிட்டது. இதனால் இருவரும் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.

அவர்களது வாகனத்தில் எரிபொருளும் தீர்ந்து போனதால், பாலைவனத்தின் கடும் வெப்பத்தில் உணவு, தண்ணீர் இன்றி தவித்தனர். அதிதீவிர வெப்பநிலையில் இருவரும் உயிர்வாழ்வதற்குப் போராடியுள்ளனர். ஆனால் உடலில் கடுமையான நீரிழப்பு ஏற்பட்டதால் இருவருமே இறந்துவிட்டனர்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை ஷெஹ்சாத் மற்றும் அவரது நண்பரின் உடல்கள் மீட்கப்பட்டன. ரப் அல் காலி பாலைவன மணல் குன்றுகளில் அவர்கள் சென்ற வாகனத்தின் பக்கத்திலேயே இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர்.

தற்காப்புக்காக லெபனானைத் தாக்கிய இஸ்ரேல்... ராக்கெட் மழை மொழிந்து பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா!

click me!