மத்திய புர்கினா ஃபாசோவில் அல்கொய்தா தாக்குதல்! - 200 பேர் பலி!

By Dinesh TG  |  First Published Aug 26, 2024, 2:11 PM IST

புப்கினோ ஃபசோ நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் என்ற ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது.
 


மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபசோவில், கயாவிற்கு வடக்கே சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள பார்சலோகோ பகுதியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தீவிரவாத ஆயுதப்படை கும்பல் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 200 பேர் வரை அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது தலைநகர் ஓவாகடூகோவைப் பாதுகாக்கும் கடைசி நிலைப் படையின் தாயகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எல்லை புறக்காவல் நிலையங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அகழிகளைத் தோண்டிய மக்கள் குழுக்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதிலு சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு பல வீரர்கள் காணவில்லை, மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களையும் இராணுவ ஆம்புலன்ஸையும் எடுத்துக் கொண்டனர்.

தாக்குதலின் பின்விளைவுகளின் கொடூரமான வீடியோக்களை JNIM வெளியிட்டதாக, செனகல் தலைநகர் டாக்கரில் இருந்து, அல் ஜசீராவின் செய்தியாளர் நிக்கோலஸ் ஹக் கூறினார்.

"ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்களாகவே தோண்டிக் கொண்டிருந்த அதே அகழிக்குள் விழுந்துவிட்டதாகவும், அக்குழிகளே அவர்களுக்கு புதைகுழிகளாக மாறிவிட்டதாக வேதனையுடன் கூறினார்.
மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க அப்பகுதியில் உள்ள மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களை காயாவிலிருந்து அழைத்துள்ளது.

புர்கினா பாசோ இராணுவம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடக்கப் போவதை அறிந்திரிந்ததாகவும், அகழிகளை தோண்டுமாறு மக்களை அழைத்ததாகவும் ஹக் குறிப்பிட்டார். "அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களிடம் தங்கள் நிலப்பரப்பின் பாதி கட்டுப்பாட்டை இழந்த புர்கினா பாசோவின் படைகளின் விரக்தியை இது காட்டுகிறது" என்று நிக்கோலஸ் ஹக் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புர்கினா ஃபாசோவில் ஆயுதக் குழுக்கள் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர். மற்றும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஊரைவிட்டு இடம்பெயந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

மர்மங்களைச் சுமந்து நிற்கும் அல் நஸ்லா பாறை! பூமிக்கு வந்த ஏலியன்கள் செய்த வேலையா?
 

click me!