2015ஆம் ஆண்டு மொரிசியோ ஹோயோஸ் பாடில்லா என்பவர் எடுத்த டீப் ப்ளூ சுறாவின் வீடியோ சமூக வலைத்தளங்களைக் கலக்குகிறது.
கிரேட் ஒயிட் ஷார்க் (Great White Shark) எனப்படும் வெள்ளை சுறாக்கள் உலகையே அச்சுறுத்தும் உயிரினங்களில் ஒன்று. அவை பிரம்மாண்டமான தோற்றம் கொண்டவை. 5.83 மீட்டர் நீளமும் 2,000 கிலோ எடையும் கொண்ட பெண் வெள்ளை சுறா உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறாவாக உள்ளது.
வெண்சுறாவில் ஆண்கள் 3.4 முதல் 4.0 மீட்டர் நீளமும் மற்றும் பெண்கள் 4.6 முதல் 4.9 மீட்டர் நீளமும் இருக்கும். பிரமிக்க வைக்கும் இந்த மாபெரும் உயிரனத்தை நம்மில் பெரும்பாலோனவர்கள் வீடியோவில்தான் பாதுகாப்பாகப்ப பார்க்க முடியும்.
undefined
இதுவரை வெள்ளை சுறாக்களின் மிகவும் கவர்ச்சிகரமான படங்களை பலரும் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளனர். இப்போது புதிதாக ஒரு வெள்ளை சுறா நெட்டிசன்களை வியப்பில் மூழ்க வைத்துள்ளது. இதுதான் இதுவரை கேமராவில் படம்பிடிக்கப்பட்ட மிகப்பெரிய வெள்ளை சுறா என்று கூறப்படுகிறது.
Dowry Case: வரதட்சணையில் பழைய பர்னீச்சர்... திருமணத்தை நிறுத்திய மணமகன்!
இந்த வீடியோ காட்சிகள் மெக்சிகோவைச் சேர்ந்த சுறா வல்லுநரும் கடல் உயிரியலாளருமான மொரிசியோ ஹோயோஸ் பாடில்லா என்பவரால் குவாடலூப் தீவில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவில் இருக்கும் பெண் வெள்ளை சுறா ‘டீப் ப்ளூ’ (Deep Blue) என அழைக்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ பாடில்லாவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 7 ஆண்டுகள் கழித்து அந்த வீடியோ மறுபடியும் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் அனைவரும் இந்த வீடியோவை ஆச்சரியத்துடன் பார்த்து ஷேர் செய்துவருகிறார்கள்.
இதுவரை 90 லட்சம் பேருக்கு மேல் இந்த வீடியவைப் பார்த்து ரசித்துள்ளனர். வீடியோ எடுக்கப்பட்டபோது டீப் ப்ளூ வெண்சுறாவுக்கு 50 வயது இருக்கலாம் என்று கடல் உயிரியியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். டீப் ப்ளூ சுறா இந்த வீடியோவில் இயல்பைவிட பெரிதாகத் தெரிவதால் அது அப்போது கருவுற்றிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.