அமெரிக்க அதிபர் ஜோ பையன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு இன்று வந்துள்ளார்.
உக்ரைன் நாடு பலவீனமாக இருக்கிறது என்ற ரஷ்ய அதிபரின் கணிப்பு முற்றிலும் தவறானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பையன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு இன்று வந்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓர் ஆண்டு நினைவையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று கிவ் நகருக்கு திடீர் பயணமாக வந்துள்ளார். உண்மையில் போலந்து செல்வதாகத்தான் அதிபர் ஜோ பைடன் பயண நிரல் இருந்தது.
சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 நிறுவனங்கள்... அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்கா!!
ஆனால், திடீரென உக்ரைன் தலைகர் கிவ் நகருக்கு ஜோ பைடன் வந்துள்ளார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கை அதிபர்ஜோ பைடன் சந்திக்க உள்ளார்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை:
உக்ரைன் மீது ரஷ்யா காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி ஓர் ஆண்டுநிறைவை உலகம் அனுசரிக்க தயாராகி வருகிறது. இன்று நான் உக்ரைன் தலைநகர் கிவ் நகரில், அதிபர் ஜெலன்ஸ்கியுடந் இருக்கிறேன். உக்ரைன் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் எல்லைப்புற ஒருமைப்பாடு ஆகியவற்றில் எங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
ஓர் ஆண்டுக்கு முன் புடின் தனது தாக்குதலை தொடங்கியபோது, உக்ரைன் பலவீனமாக இருக்கிறது என நினைத்தார் மேற்கு நாடுகள் சிதறுண்டு இருப்பதாக நினைத்தார். எங்களை வென்றுவிடலாம் என நினைத்தார். ஆனால், அவரின் நினைப்பு கணிப்பு முற்றிலும் தவறு
இன்ற நான் கிவ் நகரில், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இருக்கிறேன். உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு குறித்து அவரின் குழுவுடன் ஆலோசிக்கிறோம். வான்வெளி குண்டுவீச்சில்இருந்து உக்ரைன் மக்களை பாதுகாக்கும் வகையில் வான்வழி கண்காணிப்பு ரேடார்கள், ஏவுகணை தகர்ப்பு கருவிகள், ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க இருக்கிறோம்.
தொடரும் சிரியாவின் துயரம்... இருவேறு தாக்குதல்களில் 68 பேர் பலி
இது குறித்து இந்த வாரத்தில் நான்அறிவிப்பேன். ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கும் பலநிறுவனங்கள், உயர்குடிமக்களுக்கு எதிராக விரைவில் தடைகளையும் அறிவிக்க இருக்கிறேன். அட்லாண்டிக் முதல் பசிபிப் பிராந்தியம் வரை, கூட்டுறவை அமெரிக்கா ஏற்படுத்தி, உக்ரைனுக்கு ஆதரவாக இருக்க உதவியது. உக்ரைனுக்கு தேவையான ராணுவம், பொருளாதார, மனிதநேய ஆதரவை வழங்கியது
இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்