நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் வழங்கும் ஆண்டின் சிறந்த புகைப்படத்துக்கான பரிசு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்த்திக் சுப்ரமணியம் என்ற புகைப்படக் கலைஞர் பெறுகிறார். காட்டுயிர்களைப் படம் பிடிப்பதில் வல்லுநரான இவர் எடுத்த வெண்தலை கழுகுகள் (Bald Eagles) புகைப்படத்துக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயற்கை, மக்கள், இடங்கள் மற்றும் விலங்குகள் என்ற நான்கு வகைகளில் கிட்டத்தட்ட 5,000 படங்கள் இந்தப் பரிசுக்கான பரிசீலனைக்கு வந்துள்ளன. அவற்றில் இருந்து கார்த்திக் சுப்ரமணியம் எடுத்த படம் சிறந்ததாகத் தேர்வாகியுள்ளது. அலாஸ்காவின் சில்காட் பால்ட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் நான்கு வெண்தலைக் கழுகுகள் இடம்பெற்றுள்ளன.
undefined
ஒரு கழுகு மற்றொரு கழுகுடன் சண்டையிட்டு தனக்கான இடத்தைப் பிடிக்க முயற்சி செய்யும் காட்சியைப் பதிவு செய்துள்ள கார்த்திக், இந்தப் படத்துக்கு 'வெண்தலைக் கழுகுகளின் நடனம்' (Dance of Bald Eagles) என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
NatGeo Photo Of the Year: நேஷனல் ஜியோகிராபிக் பரிசு பெற்ற வெண்தலை கழுகு புகைப்படங்கள்
Railways Revenue: ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மூலம் ரயில்வேக்கு ரூ.1950 கோடி வருவாய்!
வெண்தலை கழுகுகளை புகைப்படம் எடுத்தது எப்படி என்று நேஷனல் ஜியோகிராஃபிக் இதழுக்குப் பேட்டி அளித்துள்ள கார்த்திக், "ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அலாஸ்காவில் சால்மன் மீன்களைப் பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கான வெண்தலை கழுகுகள் ஹைன்ஸ் அருகே உள்ள சில்கட் பால்ட் காப்பகப் பகுதிக்கு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவற்றை படமெடுக்க நான் அங்கு சென்றிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஒரு வாரம் சில்கட் பால்ட் காப்பகத்தில் தங்கி வெண்தலைக் கழுகுகளின் வாழ்வியலைக் காட்டும் அரிய படங்களை அவர் தனது கேமிராவில் கவர்ந்து வந்திருக்கிறார்.
நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் மே மாத இதழில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்கள் எடுத்த படங்களுடன் இந்தப் புகைப்படம் வெளியாக உள்ளது. அத்துடன் கார்த்திக் சுப்ரமணியத்துக்கு நேஷனல் ஜியோகிராபிக் இணைய இதழின் ஆறு மாத சந்தாவும் பரிசாக வழங்கப்படுகிறது.
சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 நிறுவனங்கள்... அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்கா!!
வெண்தலைக் கழுகுகள் அமெரிக்காவின் தேசியப் பறவை. அந்நாட்டின் தேசியச் சின்னத்திலும் வெண்தலைக் கழுகு இடம்பெறுகிறது. இதனால், அந்தக் கழுகுகளை அமெரிக்கக் கழுகுகள் என்றும் அழைப்பது வழக்கம். வட அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய இடங்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.
1995ஆம் ஆண்டில் இந்த வெண்தலைக் கழுகுகள் அழிவின் விளிம்பை எட்டியன. அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் வெண்தலைக் கழுகுகளும் சேர்க்கப்பட்டு, அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வெண்தலைக் கழுகுகள் இனம் காப்பாற்றப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெண்தலைக் கழுகு அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
Startups: ஐடி வேலையை விட்டு, கருவாடு விற்பனையில் கலக்கும் நண்பர்கள்