துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!!

Published : Feb 20, 2023, 11:57 PM ISTUpdated : Feb 21, 2023, 12:04 AM IST
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!!

சுருக்கம்

துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி-சிரியா சமீபத்திய நிலநடுக்கத்தால் பல அழிவுகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த அழிவில் இருந்து துருக்கி இன்னும் மீளவில்லை. தற்போது நூற்றுக்கணக்கான உடல்கள் குவியல் குவியலில் சிக்கியுள்ளன. இதற்கிடையில் துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: நேஷனல் ஜியோகிராபிக் பரிசு பெற்ற வெண்தலை கழுகு புகைப்படங்கள்

நாட்டின் தெற்கு மாகாணமான ஹட்டாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிலோமீட்டர் (1.2 மைல்) ஆழத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்ததால், சுற்றிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை. துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: உக்ரைன் பலவீனமாக இல்லை| அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கிவ் நகருக்கு திடீர் பயணம்

நிலநடுக்கத்தில் துருக்கியில் சுமார் 2,64,000 குடியிருப்புகள் இடிந்தன. அவற்றில் வாழ்ந்த மில்லியன் கணக்கான மக்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வீடற்ற மக்கள் துருக்கி மற்றும் சிரியாவில் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். துருக்கியின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன, ஆனால் சிரியாவில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வடமேற்கு பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. 

PREV
click me!

Recommended Stories

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!
உக்ரைன் போரில் தோற்றுவிட்டது.. ரஷ்யா தான் பலமான நாடு.. கடுப்பாகி கத்திய டிரம்ப்!