தாய் மூலம் குழந்தைகள் மூளையைப் பாதிக்கும் கொரோனா! ஆய்வில் தகவல்

By SG Balan  |  First Published Apr 10, 2023, 12:23 PM IST

தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் பிறக்கும் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மியாமி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கர்ப்பிணிப் பெண்ணுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டால் குழந்தை மூளை பாதிப்புடன் பிறப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக மியாமி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை பீடியாட்ரிக்ஸ் (Pediatrics) இதழில் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டில் கோவிட்-19 டெல்டா வைரஸ் உச்சக்கட்ட பரவலின் போது - தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தன. அந்தச் சூழலில் பிறந்த இரண்டு குழந்தைகளின் வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க தாமதங்களை கண்டதாவும் ஒரு குழந்தை 13 மாதங்களில் இறந்த நிலையில், மற்றொரு குழந்தை ஹாஸ்பிஸ் பராமரிப்பில் வைக்கப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

நானே டிரைவராக இருந்தபோதுதான் அந்த கஷ்டங்கள் புரிந்தன: மனம் திறக்கும் உபெர் சிஇஓ

இரண்டு குழந்தைகளும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. ஆனால் அவர்களின் இரத்தத்தில் அதிக அளவு கோவிட் ஆன்டிபாடிகள் இருந்தன என்று மியாமி பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவம் மற்றும் உதவி பேராசிரியரான டாக்டர் மெர்லைன் பென்னி கூறுகிறார். இதனால் வைரஸ் தாயிடமிருந்து நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கும் பரவக்கூடும் என்று தெரிகிறது எனவும் தெரிவிக்கிறார்.

இரண்டு தாய்மார்களின் நஞ்சுக்கொடிகளிலும் வைரஸ் இருப்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இறந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் மூளையில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நேரடி தொற்று மூளையில் காயங்களை ஏற்படுத்தியது எனவும் டாக்டர் பென்னி கூறுகிறார்.

இரண்டு தாய்மார்களும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டது. ஒருவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தெரிந்தன. குழந்தையை முழு வளர்ச்சி பெற்றது. மற்றொரு தாய் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். 32 வாரங்களில் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டியிருந்தது.

முத்ரா திட்டம் பற்றி பொய் பிரச்சாரம்: ப. சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதில்

மியாமி பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் ஷாஹனாஸ் துவாரா, இவை அரிதானவையாகவே இருக்கும் என்று நம்புவதாகச் சொல்கிறார். ஆனால் கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி மருத்துவப் பரிசோதனை செய்து சரிபார்த்துக்கொள்ளலாம் என்று வலியுறுத்தினார். "குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வரை, ஏழு அல்லது எட்டு வயது வரை அவர்களின் வளர்ச்சியை மிகவும் நுட்பமாக கவனிக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார். 

கர்ப்பம் தரிக்க இருக்கும் பெண்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிலுவையில் 67 ஆயிரம் போக்சோ வழக்குகள்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உ.பி. முதலிடம்

click me!