குட்டி யானை அதன் பராமரிப்பாளரின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.
உலகில் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் இடையே உள்ள அன்பு அலாதியானது. இதனை அடிக்கடி வைரலாகும் வீடியோக்கள் மூலம் நாம் காணலாம்.
யானைக்கும், அதன் பராமரிப்பாளருக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் தூய்மையானது என்று வரையறுக்கக்கூடிய ஒன்று. இணையத்தில் தற்போது பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரின் மனதைக் கவர்ந்து வருகிறது. யானை ஒன்று அதன் பராமரிப்பாளரின் கையை பிடித்து இழுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
தற்போது வைரலான இந்த வீடியோவை ட்விட்டரில் ப்யூடென்கெபிடன் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு குட்டி யானை அதன் பராமரிப்பாளரின் கையைப் பிடித்திருப்பதைக் காணலாம். குட்டி யானை தனது தும்பிக்கையை பராமரிப்பாளரின் கையைச் சுற்றி கொண்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
Baby elephant holding caretaker's hand.. 😊
pic.twitter.com/NsqCAPQr1h
ட்விட்டர் பயனர்களால் மனதைக் கவரும் காட்சியைக் கண்டு மகிழ்வதைத் தவிர்க்க முடியவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒருவர், "பெரிய அழகு" என்றும், மற்றொரு பயனாளர், "அவர்களுக்கிடையேயான பிணைப்பு உண்மையிலேயே விலைமதிப்பற்றது. இந்த குட்டி யானை அத்தகைய அக்கறையுள்ள நண்பரைப் பெற்றதற்கு அதிர்ஷ்டம்" என்றும் பதிவிட்டனர்.
இதையும் படிங்க..AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?