முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்த ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் டிரம்பின் சட்ட நடவடிக்கை செலவுக்காக ரூ.9.86 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் வெளியிட்ட புத்தகம் டிரம்ப் குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே அவர்மீது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், ஸ்டோர்மி தனக்கும் டிரம்புக்குமான உறவு குறித்து தனது புத்தகத்தில் விவரித்திருந்தார்.
டிரம்ப் ஸ்டோர்மி கூறுவதை முற்றிலும் நிராகரித்தார். இருந்தாலும் இந்தச் சர்ச்சை அதிபர் தேர்தல் நேரத்தில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்தது. இதனால் ஸ்டோர்மி டேனியல்ஸை அமைதிப்படுத்த 1.30 லட்சம் டாலர் தொகையை டிரம்ப் வழங்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
2021ஆம் ஆண்டு ஜனவரியில் டிரம்ப் ஆட்சி முடிந்து ஜோ பைடன் அரசு அமைந்ததும், இதுதொடர்பாக டிரம்ப் மீது வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை ஆஜரான டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
நாடு நரகத்துக்குச் செல்கிறது; உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது: டிரம்ப் ஆவேசம்
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒன்றில், டிரம்ப் எடுத்த சட்ட நடவடிக்கைகளில் அவர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு செலவு தொகையாக 1.21 லட்சம் (இந்திய மதிப்பில் 9.86 கோடி) டாலருக்கு மேல் வழங்க வேண்டும் என்று ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் மீது ஸ்டோர்மி டேனியல்ஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது டொனால்டு டிரம்ப்க்குக் கிடைத்த சட்டபூர்வமான வெற்றியாகவும் கருதப்படுகிறது. ஏற்கெனவே ஸ்டோர்மி இந்த வழக்கில் 5 லட்சம் டாலர் தண்டத் தொகை செலுத்தியுள்ள நிலையில், மேலும் 1.21 லட்சம் டாலர் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு தொடரப்பட்டது. இதில், டிரம்ப் உடனான உறவு பற்றி வெளிப்படுத்தி பின், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை பொது இடத்தில் வைத்து மிரட்டியதாவும் டிரம்ப் குறித்து பேசாமல் அமைதியாக இருக்குமாறு கூறியதாவும் என்று ஸ்டோர்மி தெரிவித்துள்ளார்.
பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு