Covid in China: சீனா பேரழிவைச் சந்திக்கும்!தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!5,000 பேர் உயிரிழக்கலாம்

By Pothy RajFirst Published Dec 22, 2022, 1:50 PM IST
Highlights

சீனாவில் கோரதாண்டவமாடிவரும் ஒமைக்ரான் திரிபு பிஎப்-7 வைரஸால் அடுத்துவரும் மாதாங்களில் பேரழிவுகளைச் சந்திக்க இருக்கிறது என்று ப்ளூம்பர்க் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கோரதாண்டவமாடிவரும் ஒமைக்ரான் திரிபு பிஎப்-7 வைரஸால் அடுத்துவரும் மாதாங்களில் பேரழிவுகளைச் சந்திக்க இருக்கிறது என்று ப்ளூம்பர்க் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் அடுத்தவரும் நாட்களில் தினசரி 10 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்படுவார்கள், தினசரி 5ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் உயிரிழப்பார்கள். இதுவரை உலகம் சந்திராத பேரழிவை சீனா இந்த 4வது கொரோனா அலையில் சந்திக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன

கொரோனாவால் எலுமிச்சை பழத்தை தேடி அலையும் சீன மக்கள்! விலை பன்மடங்கு உயர்வு! என்ன காரணம்?

சீனா, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியபின், அங்கு நோய் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதால், மருத்துவமனையும் நிரம்பி வழிகிறது. கொரோனாவில் உயிரிழப்பையும் சீனா சந்தித்து வருகிறது. 

சீனஅரசு வெளியிட்ட தகவலின்படி நேற்று அந்நாட்டில் 3ஆயிரம் பேர் மட்டும்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், 10க்கும் குறைவானவர்களே உயிரிழந்தார்கள் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் அங்கு நிலைமை மோசமாக இருப்பதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன

இதற்கிடையே லண்டனில் உள்ள அறிவியல் ஆய்வு நிறுவனமான ஏர்பினிடி நிறுவனம், சீனாவில் நிலவும் கொரோனா பரவல் குறித்து அங்குள்ள புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து அறி்க்கை வெளியிட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸால் 20 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்! அதிர்ச்சித் தகவல்

அதில் “ சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து நிலைமை மோசமடையும். தினசரி 10 லட்சம் பேர் வரை கொரோனாவில் பாதி்க்கப்படுவார்கள், 5ஆயிரம் பேர் வரை தினசரி உயிரிழப்பைச் சந்திக்கலாம். ஜனவரி மாதத்திதல் இந்த பாதிப்பு உச்சத்தை அடைந்து தினசரி 37 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

அடுத்த அலை மார்ச் மாதம் வரும்போது, சீனாவில் தினசரி 42 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்படுவார்கள். உலகம் இதுவரை சந்திக்காத பேரழிவுகளை சீனா சந்திக்கும்”எனத் தெரிவித்துள்ளது.ஆனால் சீனா அரசு நேற்று 3 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கொரோனாவில் பாதிக்கப்பட்டார்கள், 10க்கும் குறைவானவர்கள்தான் உயிரிழந்தார்கள் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், பெரும்பாலான சர்வதேச ஊடங்கள் சீனாவில் நிலைமை சிக்கலாக இருக்கிறது, மருத்துவமனைகளில் அதன் கொள்ளளவைவிட கொரோனா நோயாளிகள் கூட்டம் நிரம்புகிறது, மயானங்களில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கோரதாண்டவமாடும் கொரோனா!பெய்ஜிங்கில் பிணக்குவியல்! நிரம்பும் மருத்துவமனைகள்

ஏர்பினிட்டி நிறுவனத்தின் தடுப்பூசி மற்றும் தொற்றுநோய்பிரிவின் தலைவர் லூயிஸ் பிளேர் கூறுகையில் “ சீனா வெளியிடும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், கொரோனாவில் அந்த நாடு எவ்வாறு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் கூறாது. சீனாவில் வரும் நாட்களில் மோசமான பேரழிவு ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்

click me!