2-ம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜிக்கள் கொடுமைப்படுத்தும் முகாமில் 10,500 பேரை கொலை செய்தபோது அங்கு பணியாற்றிய 97 வயது மூதாட்டிக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2-ம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜிக்கள் கொடுமைப்படுத்தும் முகாமில் 10,500 பேரை கொலை செய்தபோது அங்கு பணியாற்றிய 97 வயது மூதாட்டிக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாஜிக்கள் கொடுமைப்படுத்தும் முகாமில் 10,500 பேரை கொல்லப்பட்டபோது தட்டச்சராக வேலை செய்த பெண்ணுக்கு தற்போது 97 வயதாகிறது, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
‘சிக்கன் டிக்கா மசாலா’-வைக் கண்டுபிடித்த சமையற் கலைஞர் அலி அகமது இஸ்லாம் காலமானார்
வடக்கு ஜெர்மனியில்ள்ள இட்ஜியோ நகர நீதிமன்றம், 97வயதான இம்கார்ட் பர்ச்னர் என்ற மூதாட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த குற்றம் நடந்த போது டைபிஸ்டாக இருந்த பர்ச்சனருக்கு 18வயதாகிஇருந்தது. இதனால், இப்போது அவருக்கு சிறார் குற்றத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது
ஹிட்லர் நடத்திய ஸ்டூத்தாப் நாஜிக்கள் கொடுமை முகாமில் 1943 முதல் 1945 வரை பெரும் கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. அந்த முகாமில் இம்கார்ட் பர்ச்சனர் தட்டச்சராகவும், ஸ்டெனோவாகவும் பணியாற்றினார்.
இந்த முகாமில் ஏறக்குறைய 60ஆயிரம் பேர் ஹிட்லரால் சுட்டுக்கொல்லப்பட்டும், விஷ ஊசி செலுத்தப்பட்டும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், பினாயிலை நேரடியாக இதயத்தில் செலுத்தியும், விஷப்புகையை அறையில் செலுத்தி மூச்சு திணறவைத்தும் கொடுமைப்படுத்தி கொல்லப்பட்டனர்.
பல்கலைக்கழகங்களில் படிக்க பெண்களுக்குத் தடை: ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு முரட்டு உத்தரவு
இந்த கொடுமை முமாமில் கமாண்டர் அதிகாரிக்கு உத்தரவுகளை தட்டச்சு செய்யும் பணயில் பர்ச்சனர் ஈடுபட்டிருந்தார். 2ம் உலகப் போரில் நடந்த போர்குற்ற விசாரணைகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டநிலையில் கடைசியாக இந்த வழக்கின் விசாரணை மட்டும் நடந்து வந்தது. கமாண்டருக்கு உத்தரவு நகல்களை தட்டச்சு செய்து கொடுத்த காரணத்தால் பர்ச்சனருக்கு 2 ஆண்டுகள்சிறை தண்டனை விதித்து நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அல்ஜசிரா செய்திகளின்படி, “ ஜெர்மனியில் உள்ள ஸ்டுத்தாப் முகாமில் கமாண்டருக்கு உதவியாக உத்தரவுகளை தட்டச்சு செய்து கொடுத்த பணயில் பர்ச்சனர் ஈடுபட்டிருந்தார். 10,500 பேரை கொலை செய்யும் உத்தரவுகளை தட்டச்சு செய்து பர்ச்சனர் வழங்கியுள்ளார். கொலையில் நேரடியாக பர்ச்சனர் ஈடுபடாவிட்டாலும், அதற்கு துணையாக இருந்துள்ளார் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் எலுமிச்சை பழத்தை தேடி அலையும் சீன மக்கள்! விலை பன்மடங்கு உயர்வு! என்ன காரணம்?
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கு விசாரணை நடத்த தாமதம் ஏற்பட்டபோது, பர்ச்சனர் தப்பிவிட்டார் ஆனால், அவரை சிலமணிநேரத்தில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பர்ச்சனர் கூறுகையில் “ ஸ்டுத்தாப் கொடுமை முகாமில் அப்போது நான் பணியாற்றியமைக்காக இப்போது நான் வருந்துகிறேன். நடந்தவை அனைத்துக்கும் நான் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோருகிறேன்” எனத் தெரிவித்தார்