சீனாவில் கொரோனா இல்லாத நிலை என்ற அரசின் நிலைப்பாடு சரிவராது, அதை நடைமுறைப்படுத்துவதும் கடினம். அதேநேரம் உலகில் உள்ள மக்கள் அனைவரும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா இல்லாத நிலை என்ற அரசின் நிலைப்பாடு சரிவராது, அதை நடைமுறைப்படுத்துவதும் கடினம். அதேநேரம் உலகில் உள்ள மக்கள் அனைவரும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா இல்லாத நிலை அதாவது ஜீரோ கோவிட் என்ற கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. இதனால் எந்த நகரில் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அங்கு கடினமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்கிறது. இதனால் மக்கள் இயல்வு வாழ்க்கையை வாழ முடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
undefined
அதிலும் சீனாவில் தற்போது, தினசரி 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், சீன அரசு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது. தலைநகர் பெய்ஜிங், குவாங்ஜூ, ஷாங்காய் உள்ளிட்ட ஏராளமான நகரங்களில், மீண்டும் லாக்டவுனைக் கொண்டு வந்துள்ளது சீன அரசு.
ஆனால், சீன அரசின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் கடும்எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். சீன அரசின் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகக் கோரியும் நேற்று முன்தினம் ஷாங்காய், உருமி, பெய்ஜிங்கில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் சீனாவில் மக்களின் போராட்டத்தை தூண்டிவிடும் வகையிலும், சீன அரசின் ஜீரோ கோவிட் கொள்கை சரிவராது என்றும் அமெரிக்கா விமர்சித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகு! கடும் கொரோனா கட்டுப்பாடுகள்! மக்கள் கொந்தளிப்பு !
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில் “ ஜூரோ கோவிட் கொள்கை என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று ஏற்கெனவே அமெரிக்கா கூறியுள்ளது, அதனால்தான் அமெரிக்காவில் இந்தக் கொள்கையை செயல்படுத்தவில்லை.
நாங்கள் ஏற்கெனவே கூறியதைப் போல், சீனாவில் ஜீரோ கோவிட் கொள்கை மூலம், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமானது.
China Protest:சீனா-வில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! ஒரேநாளில் 40ஆயிரம் பேர் பாதிப்பு! காரணம் என்ன?
எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துதல், பரிசோதனையை அதிகப்படுத்துதல், சிகிச்சையை அதிகப்படுத்துதல் ஆகியவைதான் முக்கியம். அதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் அமெரிக்கா மட்டுமல்ல, உலகில் உள்ள யாவரும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. சீனாவில் உள்ள மக்களும் அமைதியாகப் போராட்டம் நடத்தலாம்” எனத் தெரிவித்தார்