ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்ட வட கொரிய அதிபர்... ஆச்சரியத்தில் ஆழ்ந்த உலக நாடுகள்!!

By Narendran S  |  First Published Nov 28, 2022, 10:20 PM IST

மர்மமாகவே இருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது மகளுடன் பொது இடத்தில் தென்பட்டது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மர்மமாகவே இருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது மகளுடன் பொது இடத்தில் தென்பட்டது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வட கொரியா மிகவும் ரகசியமாக இருக்கும் நாடு. அங்கு நடக்கும் எதுவும் வெளி உலகிற்கு தெரியப்படுவதும் இல்லை தெரிந்துக்கொள்வதும் கடினம். அப்படியொரு சர்வாதிகார ஆட்சி அங்கு நடந்துவருகிறது. அத்தகைய ஆட்சியை நடத்தும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், தனது நாட்டிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் முதல் மக்கள் வரை அனைத்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் அதிபர் கிம் ஜோங் உன்.

இதையும் படிங்க: தொடர்ந்து அதிர வைக்கும் நிலநடுக்கங்கள் உலகை பெரிய பேரழிவுக்கு இட்டுச் செல்கிறதா?

Tap to resize

Latest Videos

நாட்டை பற்றி மட்டுமல்லாமல் தன்னை பற்றியும் ரகசியமாகவே வைத்திருந்த கிம் ஜோங் உன், கடந்த 18ம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியாவில் நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஏவுகணை ஏவுதளத்துக்கு தன் இரண்டாவது மகள் ஜூ அய்யுடன் வந்திருந்த கிம் ஜோங் உன், அங்கு மகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது வட கொரியாவின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ. வெளியிட்டது. இது உலக அளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஜீரோ-கோவிட் கொள்கை நீக்கப்பட்டால் இதான் நடக்கும்… சீனாவில் அதிகரிக்கும் கொரோனா குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்து, சோதனையையும் வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுடன், அதிபர் கிம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, அவரது இரண்டாவது மகளான ஜூ அய்யுடன் வந்திருந்த அவர், தனது மகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். கடந்த வாரம் வெளியான புகைப்படம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த புகைப்படமும் வெளியாகி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

click me!