உலகம் முழுவதும் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் அதிகளவில் இந்தியாவை ஒட்டி இருக்கும் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் பெரிய அளவிலான நிலநடுக்கத்தை எதிர்கொண்டு இருக்கிறதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் நிகழ்ந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு மெக்சிகோவில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் மோசமானதாக இருந்தது. இங்கு 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், உயிரிழப்பு 1,100 பேருக்கும் மேலாக இருந்தது. இதையடுத்து கடந்த நவம்பர் 21ஆம் தேதி, இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
சாலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.0 என்ற ரிக்டர் அளவில் இருந்தது. துருக்கியில் 6.1 ரிக்டர் அளவிலும், மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியாவில் 6.2 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த மூன்று நிலநடுக்கங்களும் பெரிய அளவில் ஏற்பட்டு, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. 2022 ஆம் ஆண்டில் ஏற்கனவே ரிக்டர் அளவில் 7.0 அல்லது அதற்கு மேற்பட்ட 11 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த ஆண்டு 6.0 மற்றும் 6.9 ரிக்டர் அளவுகளுக்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக இந்தியாவில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த முறை அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வின் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் தகவலில், ''நில அதிர்வுகள் திடீர் அல்லது தற்காலிக அதிகரிப்பானது இயல்பானதாக கருதப்படுகிறது. இது அதிக அல்லது குறைந்த அளவிலான நிலநடுக்கம் உடனடியாக ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கம் அல்லது பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அவற்றை துல்லியமாக கணித்துக் கூறும் நவீன தொழில் நுணுக்க கருவிகள் வந்துவிட்டன. அவற்றைக் கொண்டு எளிதில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நீண்ட கால பதிவாக சுமார் 1900ஆம் ஆண்டு முதல் எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு ஆண்டிலும் மொத்தமாக 16 பெரிய நிலநடுக்கங்களை சந்தித்து இருக்கிறோம். அதில் 7 ரிக்டர் அளவில் 15 நிலநடுக்கங்களும், 8.0 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களும் அடங்கும். கடந்த 40-50 ஆண்டுகளில், பெரிய அளவில் நிகழ்ந்த நிலநடுக்கம் என்று எடுத்துக் கொண்டால், 12க்கும் மேல் நிகழ்ந்துள்ளன.
indonesia earthquake: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!!
நிலநடுக்கம் கணிக்க முடியுமா?
விஞ்ஞானிகளிடமிருந்து இதற்கு தெளிவான பதில் இல்லை. இதுவரை, எந்த விஞ்ஞானியாலும் அல்லது நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனத்தாலும் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிக்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (ஆண்டுகளில்) ஒரு குறிப்பிடத்தக்க நில அதிர்வு நிகழலாம் என்று விஞ்ஞானிகள் இதுவரை கணிக்க முடிந்து இருக்கிறது.
பூகம்பம் என்றால் என்ன?
பெரிய அளவிலான அதாவது MegaQuakes என்பது 10 அல்லது அதற்கும் மேற்பட்ட ரிக்டர் அளவு கொண்டவை. அவற்றை தமிழில் பூகம்பம் என்று அழைக்கலாம். இருப்பினும், இதுபோன்ற பூகம்பங்கள் ஏற்படாது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. அதாவது நிலத்தில் பிளவு பெரிய அளவில் இருந்தால், பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதுவரை அவ்வாறு நிகழ்ந்தது இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை வரலாற்றில் மிகப்பெரிய பூகம்பம் என்று மே 22, 1960 அன்று சிலியில் ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை கூறலாம். இந்த நிலநடுக்கம் சுமார் 1,000 மைல் நீளத்திற்கு ஏற்பட்டது.
Indonesia Earthquake: மேற்கு ஜாவா பகுதியை புரட்டிப் போட்ட நிலநடுக்கம்; உயிரிழப்பு 252 ஆக உயர்வு!!
உலுக்கிய நிலநடுக்கங்கள்:
* சிலி, வால்டிவியாவில் மே 22, 1960 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.5 ஆக இருந்தது
* அலாஸ்காவில், பிரின்ஸ் வில்லியம் சவுண்ட் என்ற இடத்தில் 28 மார்ச், 1964 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.2 ஆக இருந்தது.
* இந்தோனேசியா, சுமத்ராவில் 26 டிசம்பர், 2004 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.1 ஆக இருந்தது.
* ஜப்பானில், செண்டாய் என்ற இடத்தில் 11 மார்ச், 2011 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.0 ஆக இருந்தது.
* ரஷ்யாவில், கம்சட்கா என்ற இடத்தில் 4 நவம்பர், 1952 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.0 ஆக இருந்தது