சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கொந்தளித்துப்போய், வீதியில்இறங்கி போராடினர். அதிபர் ஜி ஜின்பிங் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரி மக்கள் கொந்தளித்துப்போய் பாோராட்டத்தில் குதித்துள்ளனர்.
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கொந்தளித்துப்போய், வீதியில்இறங்கி போராடினர். அதிபர் ஜி ஜின்பிங் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கோரி மக்கள் கொந்தளித்துப்போய் பாோராட்டத்தில் குதித்துள்ளனர்.
சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் கடந்த மாதம் நடந்த 20-வது தேசிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து 3 வாரங்களுக்குள் மக்கள் அவருக்கு எதிராக கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
undefined
சீனாவில் கொரோனா இல்லாத நிலை(ஜீரோ கோவிட்) என்ற கொள்கையை சீன கம்யூனிஸ்ட் அரசு கடைபிடித்துவருகிறது. இதனால், கொரோனா பரவல் இருந்தாலே அந்தப் பகுதியில் கடும் கட்டுபாடுகள், ஊரடங்கு, மக்கள் வெளியேறத் தடை, கட்டாய கொரோனோ பரிசோதனை போன்றவற்றை அரசு செய்ய மக்களை கட்டாயப்படுத்துகிறது.
இன்னுமா லாக்டவுன்! சீன அரசின் முரட்டு விதிகளுக்கு எதிராக மக்கள் வன்முறை! வைரல் வீடியோ
சீன அரசின் அதிகப்படியான கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், தொழில்களைச் செய்ய முடியாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும் கடும் அவதிப்படுகிறார்கள். சீன மக்கள் அரசின் கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் அச்சம் இருப்பதாக கருதுகிறார்கள்.
ஏற்கெனவே சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடக்கும் முன்பாக பல்வேறு மாகாணங்களில் மக்கள் போராட்டம் நடத்தியிருந்தார்கள். இந்நிலையில், நேற்று குவாங்சோ, பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.
சீனாவில் தினசரி கொரோனா தொற்று 33,144 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சீனாவில் முதன்முதலில் 2019ம் ஆண்டு உஹானில் கொரோனா பரவியபோது இருந்த பரவலுக்குப்பின் இப்போதுதான் இந்த அளவு அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை அச்சுறுத்தினாலும், மக்களை சுதந்திரமாக நடமாடவிட்டால் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுவிடும் என்பதால் அரசும் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த தயங்குகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜின்ஜியாங்கின் உருமி நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தார்கள். இந்தக் குடியிருப்புப் பகுதியில் கொரோனாகட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், தீ தடுப்பு வாகனம் வர முடியவில்லை. இதனால் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்தார்கள்.
கலக்கத்தில் சீனா! அதிகரிக்கும் கொரோனா! 100 ஆண்டு பழமையான ஜிஜியாங் நாடக அரங்கு மூடல்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சீனஅரசு பின்பற்றும் அதிகப்படியான கட்டுப்பாடுகளால் சீனாவில் வேலையின்மை அதிகரித்துள்ளது, மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது,
மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் மக்களால் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் கொந்தளித்துப் போய் பல்வேறு நகரங்களில் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும், அவர் பதவியிலிருந்து இறங்கக் கோரியும் போராட்டம் நடத்தினார்கள்.
கடந்த வாரம் ஹெங்ஹூ நகரில் உள்ள ஐ போன் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தை கலைக்க முயன்றபோது, போலீஸாருக்கும், ஊழியர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஐபோன் சிட்டியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தபோது ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் கூடி போராட்டம் நடத்தினார்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறினார்கள்.
கவலையில் சீனா! விடாமல் துரத்தும் கொரோனா !3 வாரத்தில் 2.53 லட்சம் பாதிப்பு
சிஎன்என் சேனல் வெளியிட்ட செய்தியில், ஷாங்காய் மாகாணத்தில் உருமி நகரில், நூற்றுக்கணக்கான மக்கள் நேற்றுமுன்தினம்மெழுகுவர்த்த்தி ஏந்தி, தீவிபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அது மட்டுமல்லாமல் சீன அரசுக்கு எதிராகவும், அரசு கடைபிடிக்கும் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், மனித உரிமைகள், சுதந்திரத்தை மதிகக்கோரியும் மக்கள் போராட்டம் நடத்தினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன