ஜீரோ-கோவிட் கொள்கை நீக்கப்பட்டால் இதான் நடக்கும்… சீனாவில் அதிகரிக்கும் கொரோனா குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட்!!

By Narendran S  |  First Published Nov 28, 2022, 8:47 PM IST

ஜிரோ-கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் குறைந்தது 12 மில்லியன் சீன குடும்பங்கள் வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் இயந்திரங்களை வாங்க வேண்டியிருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜீரோ-கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் குறைந்தது 12 மில்லியன் சீன குடும்பங்கள் வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் இயந்திரங்களை வாங்க வேண்டியிருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து வெளியான அறிக்கையில், சீனாவில் ஆறு மாத காலத்துக்கு பிறகு மீண்டும் கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. மேலும் சீனாவில் ஜீரோ-கோவிட் கொள்கையை அரசு கடைபிடிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜீரோ-கோவிட் கொள்கையை அமல்படுத்துவதற்காக, பல லட்சம் பேர் வசிக்கும் பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதுடன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசால் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

இதையும் படிங்க: சீனா-வில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! ஒரேநாளில் 40ஆயிரம் பேர் பாதிப்பு! காரணம் என்ன?

Tap to resize

Latest Videos

மேலும் இதனால் உரும்கியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் இறந்த செய்தியும் தணிக்கை செய்யப்பட்டதால் சீன தணிக்கைக்கு எதிராகவும் எதிர்ப்புகள் எழுந்தன. சீன ஸ்டேட் கவுன்சில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, நவம்பர் 11 முதல், கோவிட் -19 மற்றும் அதன் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக மருத்துவக் கடைகளை நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர். சோங்கிங்கை தளமாகக் கொண்ட நிதி நிறுவனமான சவுத்வெஸ்ட் செக்யூரிட்டிஸின் தரவை மேற்கோள் காட்டி, ஜீரோ-கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் குறைந்தது 12 மில்லியன் சீன குடும்பங்கள் வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் இயந்திரங்களை வாங்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தொடர்ந்து அதிர வைக்கும் நிலநடுக்கங்கள் உலகை பெரிய பேரழிவுக்கு இட்டுச் செல்கிறதா?

மேலும் WeChat தரவின் படி, வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் இயந்திரங்கள் மற்றும் ஆக்சிமீட்டர்களுக்கான தேடல்கள் 90 மடங்கு அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதுக்குறித்து பேசிய சீன மக்கள், வென்டிலேட்டரை வாங்க 500 டாலருக்கும் அதிகமாகவும், ஆக்ஸிஜன் இயந்திரத்திற்கு 100 டாலருக்கும் அதிகமாகவும் செலவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரிப்பதோடு படுக்கை பற்றாக்குறையும் ஏற்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் இதன் மூலம் பெய்ஜிங்கில் உள்ள குடிமக்கள் மாநில சுகாதார அமைப்பை நம்ப விரும்பவில்லை என்பது அவர்களின் பீதியை காட்டுவதாக கூறப்படுகிறது.

click me!