taiwan: pelosi:நான்சி பெலூசி தைவான் சென்றால் அதற்குரிய விலை கொடுப்பீர்கள்: அமெரி்க்காவுக்கு சீனா எச்சரிக்கை

By Pothy Raj  |  First Published Aug 2, 2022, 4:31 PM IST

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலூசி தைவானுக்குச் சென்றால், அமெரிக்கா அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.


அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலூசி தைவானுக்குச் சென்றால், அமெரிக்கா அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 1949ம் ஆண்டு சீனாவில் நடந்த உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீனாவும் தைவானும் பரிந்தன. இருப்பினும் தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் சுதந்திரம் குறித்து எந்த நாடு பேசினாலும், வெளிநாட்டு தலைவர்கள் சென்றாலும் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

al zawahiri: al qaeda: அல் ஜவாஹிரியைக் காட்டிக்கொடுத்தது யார்? ஐஎம்எப் நிதிக்காக போட்டுக்கொடுத்த பாகிஸ்தான்

இந்நிலையில் அமெரி்க்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலூசி ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூருக்கு வந்துள்ள நான்சி பெலூசி அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தைவான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்சி பெலூசி தைவான் செல்வதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சுன்யிங் அளித்த பேட்டியி்ல் “ சீனாவின் இறையாண்மை நலன்களுக்கு எதிராக, அதை குறைத்து மதிப்பிட்டால், அமெரிக்கா அதற்கு பொறுப்பேற்று, அதற்குரிய விலையைத் தர வேண்டியிதிருக்கும்” எனச் எச்சரித்தார்.

al zawahiri: Al Qaeda: அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடுத்த தலைவர் இவரா?

கடந்த 1997ம் ஆண்டுக்குப்பின் அமெரிக்கா சார்பில் உயர் பதவியில் இருக்கும் எந்த தலைவரும் தைாவனுக்குச்செல்லவில்லை. அவ்வாறு நான்சி தற்போதுசென்றால், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப்பின் சென்ற தலைவர் என்ற பெருமையாப் பெறுவார். 

கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் விடுத்த எச்சரிக்கையில், “ அமெரிக்கா தைவான் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது. இது நெருப்போடு விளையாடுவதற்கு சமம்” என்று எச்சரித்தார்.
ஐக்கிய நாடுகளுக்கான சீன தூதர் ஹாங் ஹன் கூறுகையில் “ தைவானுக்கு நான்சி பெலூசி செல்வது மிகவும் ஆபத்தானது. சீனாவின் கோபத்தை கிளறுவதைப்போலாகும். பிடன் அரசாங்கம் புரிந்து கொண்டு பெலூசியை நிறுத்தும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவி்த்தார்

al qaeda: Ayman al-Zawahiri:அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜவாஹிரி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்

ஆனால், வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் “ நான்சி பெலூசிக்கு தைவான் செல்ல உரிமை இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

நான்சி பெலூசி வருகைக்கு இதுவரை தைவான் அரசு எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. தைவான் பிரதமர் சூ செங் சாங் கூறுகையில் “ நான்சி பெலூசி வருகை குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதேசமயம், பெலூசி ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

click me!