சீனாவின் வூஹான் நகரில் தான் முதலில் கொரோனா பரவியது. ஆனால், மற்ற நகரங்களுக்கு பரவ விடாமல் சீனா பார்த்துக் கொண்டது. அதேநேரத்தில் சீனாவை விட்டு உலக நாடுகளுக்கு கொரோனா பரவ விட்டு விட்டது
சீனா நினைத்திருந்தால், வெளிநாடுகளுக்குப் பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடாது என்ற முடிவை சீனா எடுத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனா வின் வூஹான் நகரில், கரோனா வைரஸ் பரவியது. அதன்பிறகு உலகம் முழுவதும் வைரஸ் பரவி 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவிய தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே அதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் இதுகுறித்து பேசுகையில், ‘’கொரோனா பரவல் விஷயத்தில் சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. சீனா நினைத்திருந்தால், வெளிநாடுகளுக்குப் பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடாது என்ற முடிவை சீனா எடுத்திருக்கிறது.
சீனாவின் வூஹான் நகரில் தான் முதலில் கொரோனா பரவியது. ஆனால், மற்ற நகரங்களுக்கு பரவ விடாமல் சீனா பார்த்துக் கொண்டது. அதேநேரத்தில் சீனாவை விட்டு உலக நாடுகளுக்கு கொரோனா பரவ விட்டு விட்டது’’என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.