Death Threat for Vivek Ramasamy : இந்திய வம்சாவளியை சேர்ந்த, குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் மற்றும் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்களை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது நேற்று திங்கள்கிழமை அன்று குற்றம் சாட்டப்பட்டதாக அந்நாட்டு ஊடங்களால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நீதித்துறை ஊடங்களுக்கு அளித்த தகவலின்படி, நியூ ஹாம்ப்ஷயரின் என்ற நகரை சேர்ந்த டோவரின் 30 வயதான டைலர் ஆண்டர்சன், பிரச்சார உரைக்கு எதிராக இரண்டு விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில் முதலாவதாக "கிரேட், பல மூளைகளை வெடிக்கவைக்க இது எனக்கு கிடைத்திருக்கும் இரண்டாம் வாயப்பு" என்று கூறியுள்ளார்.
டாய்லெட்டில் மைக்கை ஆஃப் செய்ய மறந்த விவேக் ராமசாமி! விழுந்து விழுந்து சிரித்த எலான் மஸ்க்!
மேலும் அவர் வெளியிட்ட இரண்டாம் செய்தியில், அங்குள்ள அனைவரையும் கொன்றுகுவிக்க போகிறேன், என்று பகிரங்கமாக கூறியுள்ளார். திரு ராமசாமியின் பிரச்சாரம் விரைவாகச் செயல்பட்டதாக FBI பிரமாணப் பத்திரம் வெளிப்படுத்தியது, அவர்களின் வாக்காளர் அறிவிப்பிற்குப் பதிலளிக்கும் வகையில் பெறப்பட்ட செய்திகளைப் பற்றி உடனடியாக காவல்துறைக்குத் தெரிவித்தது.
அச்சுறுத்தும் செய்தி வந்த தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் ஆண்டர்சனின் அடையாளத்தை உறுதிப்படுத்தினர். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். ஆண்டர்சனை கைது செய்வதில் துரித நடவடிக்கை எடுத்ததற்காக சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு திரு. ராமசாமி நன்றி தெரிவித்தார். "நம்மைச் சுற்றி இருக்கும் குழுவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நான் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் அவர்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான்.. இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் - பீதியில் மக்கள்!
கைதான ஆண்டர்சன் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $2,50,000 வரை அபராதம் ஆகியவற்றை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.