world tourism day 2022: தென் ஆப்பிரிக்க சுற்றுலாவில் வேகமாக வளரும் சென்னை! 2025க்குள் முக்கிய இடம்

By Pothy RajFirst Published Sep 27, 2022, 10:48 AM IST
Highlights

2025ம் ஆண்டுக்குள் தென் ஆப்பிரி்க்கச் சுற்றுலாவில், இந்தியச் சந்தையில் வேகமாக வளரும் நகராக சென்னை இருக்கும் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 

2025ம் ஆண்டுக்குள் தென் ஆப்பிரி்க்கச் சுற்றுலாவில், இந்தியச் சந்தையில் வேகமாக வளரும் நகராக சென்னை இருக்கும் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவுக்கு வந்தவர்களில் 3வது அதிகபட்சமாக சென்னை நகருக்கு வந்துள்ளனர். ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளில் 7.5 சதவீதம் பேர் சென்னைக்கு வந்துள்ளனர். மும்பை மற்றும் டெல்லி முதல் இரு இடங்களில் உள்ளன. 

மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்
இருப்பினும் 2025ம் ஆண்டுக்குள் தென் ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருக்கும் நகராகவும், வேகமாக வளர்ந்துவரும் சந்தையாகவும் சென்னை மாறும். 2025ம் ஆண்டில் ஏறக்குறைய 30 சதவீதம் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணிகள் சென்னைக்கு வருவார்கள் என சிஏஜிஆர் தெரிவித்துள்ளது

சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கையில் “ சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க தமிழக சுற்றுலாக் கழகத்துடன் இணைந்து திறன் மேம்பாடு மற்றும் மற்ற சாத்தியமான அம்சங்களில் ஒத்துழைத்து செயல்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி: ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: பிரதமர் கிஷிடாவுடன் சந்திப்பு

சிஏஜிஆர் அமைப்பின் மத்திய கிழக்கு, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, தென் ஆப்பிரிக்க சுற்றுலாவின் மண்டலத் தலைவர் நெலிஸ்வா நெகானி கூறுகையில் “ இந்தியாவில் உள்ள 3 முக்கிய சுற்றுலாச் சந்தைகளில் சென்னையும் முக்கிய இடமாகவும், வளர்ந்து வரும் சந்தையையும் கொண்டிருக்கிறது.

ஏராளமான அம்சங்கள் இந்த நகரில் நிறைந்துள்ளன. பல்வேறு அம்சங்களில் கூட்டாக செயல்படுவதன் மூலம் இங்கு வலுவாக கால்பதிக்க முடியும். தென்ஆப்பிரிக்காவிலிருந்து வரும் மக்கள் இன்னும் அணுகக்கூடியதாக இருக்கும் வகையில் சென்னையில் முதலீடு செய்வோம். நேரடி விமானச் சேவையையும் அதிகப்படுத்தக் கூறுவோம். 


2021ம் ஆண்டில்  தனிநபர் சுற்றுலாப்பயணிகளில்  58.2 சதவீதம்பேர் சென்னையிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ளனர். 34.7சதவீதம் பேர் உடன் பணியாற்றுவோர், குடும்பத்தினர், நண்பர்களுடன் வந்துள்ளனர். 

2024ம் ஆண்டிக்குள் இந்திய சுற்றுலாப்பயணிகளால் கிடைக்கும் பொருளாதாரம் 4200 கோடி டாலராக அதிகரிக்கும். என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் முதலீடு செய்வதற்குஇப்போது  உகந்த நேரம் என நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவின் குரல் உலகளவில் கவனிக்கப்பட பிரதமர் மோடியே காரணம்! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

கடந்த சில நாட்களாக எங்களின் உரையாடல்களின் அடிப்படையில், அடுத்த 6 மாதங்களில் தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் செய்யும் எம்ஐசிஇ குழுக்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். 

சென்னையிலிருந்து, நிதி, தகவல் தொழில்நுட்பம், அழகு, காப்பீடு, நிலக்கரி மற்றும் சுரங்கம், மருந்து, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிறுவனங்களில் இருந்து முன்பதிவுகளை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்

2022, ஜனவரி முதல் மே மாதம் வரை 17,627 பேர் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் இது 28,890 ஆக அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.

இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா வழங்குவதையும் தென் ஆப்பிரிக்க அரசு விரைவுப்படுத்தியுள்ளது. விசாவுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள்ளேயே விசா வழங்குகிறது.

click me!