ரஷ்ய நாட்டின் மத்திய பகுதி மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின், இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாஸ்கோவிற்கு கிழக்கே 960 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இசேவ்ஸ்க் நகர். இந்த நகரில் உள்ள பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!
பள்ளியின் 7 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் அடையாளம் தெரியாத நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்த பள்ளியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க..‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறார்களா பெண்கள்.. இதுதான் திராவிட மாடலா? கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!
பள்ளி குழந்தைகள் வெளியேற்றப்பட்டு, அதைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?