11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?

By Raghupati R  |  First Published Jan 6, 2023, 4:36 PM IST

பறவை ஒன்று அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நிற்காமல் பறந்து உலக சாதனையை முறியடித்தது.


பார்-டெயில் காட்விட் என்ற பறவை அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள் இடைவிடாமல் பறந்து சாதனை படைத்துள்ளது.

வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற பறவை இனம் இருக்கிறது. குளிர் காலத்தின் பனி அதிகம் ஆகும் நேரம் அது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம் ஆகும். மற்ற பறவை இனங்களை போல் இது அடிக்கடி இடையே ஓய்வெடுக்காது. எப்போதாவது தரையிறங்கும் என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..Pudukkottai : நீங்களா ஏன் இங்க குளிக்கிறீங்க.? புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை.. மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

ஒருவேளை தரையிறங்கினாலும், இது தண்ணீரில் தரை இறங்காது. அதற்கு மிக முக்கிய கரணம், அதன் உடல் அமைப்பு தான். இதன் உடலமைப்பு தண்ணீரில் மிதக்க ஏற்றது அல்ல. அதனால் தண்ணீரில் தெரியாமல் விழுந்தால் கூட பறவைக்கு இறப்பு தான். இதனாலேயே இந்த பறவை நீண்ட தூரம் நிற்காமல் பறக்கும்.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, 234684 என்ற டேக் எண் மூலம் அறியப்படும் பார்-டெயில்ட் காட்விட் (லிமோசா லப்போனிகா), அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர்கள் (8,435 மைல்கள்) உணவு அல்லது ஓய்வுக்காக நிற்காமல் பறந்து சாதனையை முறியடித்தது.

கடந்த தூரம் லண்டனுக்கும் நியூயார்க்கிற்கும் இடையிலான இரண்டரை பயணங்களுக்கு சமம் அல்லது கிரகத்தின் முழு சுற்றளவில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு ஆகும். அதன் கீழ் முதுகில் இணைக்கப்பட்ட 5G செயற்கைக்கோள் தகவலின்படி,  இந்த பயணம் அக்டோபர் 13, 2022 அன்று தொடங்கியது. 11 நாட்கள் மற்றும் ஒரு மணி நேரம் பறவை தரையிறங்காமல் தொடர்ந்தது என்று பதிவு செய்யும் அமைப்பு கூறியுள்ளது.

இதையும் படிங்க..ஆளுநர் தான் பொறுப்பு.. திமுக 1,000 தரவில்லை? 2024 கூட்டணி யாருடன்? சஸ்பென்ஸை உடைத்த அன்புமணி ராமதாஸ்

இது கடந்த 2020ம் ஆண்டு அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு பறவையால் சாதனை செய்யப்பட்டது என்றும், அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். பொதுவாக நியூசிலாந்திற்கு இடம்பெயரும் இந்த காட்விட், 90 டிகிரி திருப்பத்தை ஏற்படுத்தி அவுஸ்திரேலியாவின் கிழக்கு டாஸ்மேனியாவில் உள்ள அன்சன்ஸ் விரிகுடாவின் கரையில் தரையிறங்கியது.

இரவு பகலாக பறவை மேற்கொண்ட இந்த பயணத்தின் விளைவாக அதன் உடல் எடை பாதிக்கும் மேல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக நியூசிலாந்துக்கு புலம்பெயர்ந்து செல்லும் இந்த காட்விட் வகை பறவை, இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

click me!