ஜி20 உச்சி மாநாட்டில் கைகோர்த்த சீனா - அமெரிக்கா.. ஆப்சென்ட் ஆன ரஷ்யா.. ஏன் தெரியுமா ?

By Raghupati R  |  First Published Nov 14, 2022, 5:55 PM IST

ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் அங்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்  சந்தித்து பேசியுள்ளனர்.


ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை தொடங்கி, இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி மூன்று நாள் பயணமாக டெல்லியிலிருந்து, இன்று பாலி நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்கிறார்.

உலக பொருளாதாரம் , எரிசக்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார்.  அது மட்டுமல்லாமல் ஜி20 தலைவர்கள் சிலரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது உக்ரைன் - ரஷ்யா போரால் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார்  கூறப்படுகிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?

இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, உக்ரைன் போன்ற நாடுகள் பங்கேற்க இருக்கிறது. இந்த நிலையில் இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசினர்.  பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘சீனாவும் அமெரிக்காவும் உறவை சரியாக கையாளும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. எங்கள் சந்திப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே உலக அமைதிக்கு அதிக நம்பிக்கையையும், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு அதிக நம்பிக்கையையும், பொதுவான உத்வேகத்தையும் கொண்டு வர அனைத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இரு நாட்டு உறவுகளும் சுமுகமாக இருக்கிறது. இந்த மாநாடு உலகின் பெரும் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் என்று நம்புகிறோம் என்று கூறினார். இந்த மாநாட்டில் உக்ரைன் நாடு கலந்து கொள்ள இருப்பதால், ரஷ்யா பங்கேற்காது என்று கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க..பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !

இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்

click me!