ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை தொடங்கி, இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி மூன்று நாள் பயணமாக டெல்லியிலிருந்து, இன்று பாலி நகருக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்கிறார்.
உலக பொருளாதாரம் , எரிசக்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார். அது மட்டுமல்லாமல் ஜி20 தலைவர்கள் சிலரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார்.
இதையும் படிங்க..கணவருடன் இருக்க முடியல.. பிரியங்கா காந்தி சொன்னது இதுதான் - கண் கலங்கிய நளினி !
இந்த சந்திப்பின் போது உக்ரைன் - ரஷ்யா போரால் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார் கூறப்படுகிறது.ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கருப்பொருளின் கீழ் உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜி20 தலைவர்கள் விரிவாக ஆலோசிப்பார்கள். பிரதமர் மோடி மற்ற நாடுகளின் பிரதமர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.
பாலியில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் பிரதமர் உரையாற்றுவார். உலக நாடுகளின் பொருளாதாரம், எரிசக்தி சுற்றுசூழல், பாதுகாப்பு ஆகியவை குறித்தும் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் உக்ரைன் கலந்து கொள்ள உள்ளதால், ரஷ்யா இதில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்
இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?